அண்மையில் பெய்த பருவ மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. புதிய நகராட்சி பொறுப்பேற்ற காலத்திலேயே இது நிகழ்வுற்றதால், அதன் துவக்கப்பணியே மழை நீர் அகற்றும் பணியாகிப் போனது.
காயல்பட்டினம் சுலைமான் நகர் என்றழைக்கப்படும் மாட்டுக்குளம் பகுதியில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்துவதற்காக, அங்குள்ள சல்லித்திரடு வளாகத்தில், ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு மழை நீர் வடிகால் வெட்டப்பட்டது.
பருவ மழை முடிவுற்றுள்ள நிலையில், நேற்று காலை 10.00 மணியளவில், நகராட்சி அலுவலர் செந்தில்குமார் மேற்பார்வையில், அங்கு வெட்டப்பட்ட பள்ளம் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு மூடப்பட்டது.
பணிக்காலத்திலேயே பல மாதம் நிலுவையில் வைக்கப்படும் மக்கள் தேவைகள் ஒருபுறமிருக்க, குடியரசு தினமான நேற்று, அரசு விடுமுறை காலத்திலும் இதுபோன்று மக்கள் பணி செய்யப்பட்டது வியப்பூட்டுவதாக அமைந்திருந்தது. |