இந்தியாவின் 63ஆவது குடியரசு தினம் 26.01.2012 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் அன்று காலை 08.00 மணிக்கு காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் குடியரசு தின விழா, கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் ஏ.சிந்தியா செல்வகுமாரி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவியரின் அணிவகுப்பைப் பார்வையிட்டதோடு, தேசிய கொடியேற்றி, சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி என்.எம்.ஃபாத்திமா ரிஃப்கா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
பின்னர், மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, கல்லூரியின் இரண்டாமாண்டு கணிப்பொறியியல் மாணவி ஆர்.எஸ்.தேவிகா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அபுலஹ்ஸன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் பேராசிரியையர் மற்றும் மாணவியர் செய்திருந்தனர். |