காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனிடம் நகர்நலன் குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிக நுகர்வோரைக் கொண்ட ஏ.கே.எல். 3 நியாய விலைக் கடையில், பொருட்களை நிறுவை செய்ய ஊழியரை நியமிக்கவும், காயல்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை புதுப்பித்துக் கட்டவும், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் செயல்படா நிலையிலுள்ள வாவு அறுவை சிகிச்சையரங்கத்தை செயல்படுத்துவதோடு, அதிகளவில் மருத்துவ நிபுணர்களை நிரந்தரமாக நியமிக்கவும் அக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |