துளிர் பள்ளி அறிவூட்டும் மனமகிழ் மன்றம் சார்பில், இந்தியாவின் 63ஆவது குடியரசு தினத்தையொட்டி பாஞ்சாலக்குறிச்சியின் வரலாற்று நினைவிடமாக அமைந்துள்ள வீரப்பாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்கு துளிர் சிறப்பு குழந்தைகளும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும், அப்பள்ளியின் திட்ட மேற்பார்வையாளர் இசட்.சித்தி ரம்ஸான் தலைமையில் சிற்றுலா சென்றனர்.
அங்கு அவர்கள், கட்டபொம்மனின் வீர வரலாற்று நினைவிடங்களைப் பார்வையிட்டதோடு, வெள்ளையர்களுக்கு எதிராக அவர் வீரத்துடன் போராடிய நிகழ்வுகளை இளஞ்சிறாருக்குப் புரியும் வகையில், பள்ளியின் சிறப்பாசிரியை ஃபாஸிலா மற்றும் வசுமதி ஆகியோர் விளக்க, அவர்கள் ஆர்வத்துடன் அவற்றைக் கவனித்தனர்.
சிற்றுலா ஏற்பாடுகளை, துளிர் அறிவூட்டும் மன்றம், பெற்றோர் மன்றம் ஆகிவற்றின் தலைவரான வி.எஸ்.ஏ.ஆயிஷா ஸாஹிப்தம்பி செய்திருந்தார்.
மாலையில், சிற்றுலாக்குழுவினர் அனைவரும் தூத்துக்குடியிலுள்ள ரோச் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு, துளிர் இளஞ்சிறாரும், பணியாளர்களும் மாலைப்பொழுதை மகிழ்வுடன் கழித்து, மனநிறைவுடன் துளிர் பள்ளி வளாகம் திரும்பினர்.
` |