புங்கை, வேம்பு, முருங்கை மரங்கள் மற்றும் மலர்ச்செடிகள் என 350 மரங்கள் நட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கோமான் நற்பணி மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. Re:கோமான் நற்பணி மன்றம் சார்... posted byP.S.ABDUL KADER (JEDDAH,KSA)[30 January 2012] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16375
திருமணத்திற்கு வாழை
மரணத்திற்கு மூங்கில்
தொடரும் மரத்தில் உறவு
தொட்டில் முதல்
சுடுகாடு வரை
மரம்
வாழ்ந்தால் நிழல்
வீழ்ந்தால் விறகு
மரம்
வெட்டும் வில்லனுக்கும்
நிழல் தந்தது மரம்
இயற்கையின் விசித்திரம்
சிறிய விதை
பெரிய விருட்சமானது
2. இந்த சிறிய மரம் நாளை வரும் தலைமுறை மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்...இன்சாஹ் அல்லாஹ்.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[30 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16378
மரம் நடுதல் என்பது முக்கியம் அல்ல.. அந்த மரத்தை நட்டிய பின் நாம் அதற்க்கு பொறுப்பாளிகளாக ஆகிவிட்டோம் இனி நாம் அதை ரெம்ப கவனமாக கண்காணித்து வீட்டில் நம் பிள்ளைகளை வளர்ப்பது போல் தாகம் தனிய தண்ணீர் பாச்சி அதை வளர்க்க வேண்டும்...
கோமான் நற்பணி மன்றம் நல்ல அருமையான ஏற்பாடு செய்து இருப்பது பாராட்டுக்குரியவர்கள்...
இந்த சிறிய மரம் நாளை வரும் தலைமுறை மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்...இன்சாஹ் அல்லாஹ்..
3. Re:கோமான் நற்பணி மன்றம் சார்... posted byT,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852)[31 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16384
மரம் நடுவோம் பலன் பெறுவோம் !!! மரத்தை நட்டவன் தண்ணி ஊத்துவான் என்பது நம்ம ஊர் பெண்களின் பழமொழி.. இதன் கருத்து மிக மிக ஆழம். வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் களுக்கு ஆறுதல் கூறும் சமயம் கூறிக்கொள்வது ஒன்று. மரண வீடுகளில் பலமக்களை விட்டு விட்டு மரணமானவரின் குடும்பத்தாருக்கு மக்களைப் படைத்தது (மரம் நட்டவன்) ஆண்டவனே, அவனேதான் வளப்பான் (தண்ணீ ஊத்துவான்) கவலைப்படாதீங்க எனும் ஆறுதல் வார்த்தைகள் கூறுவார்கள், இன்னும் பல பல. அது போலவே இந்த 350 மரங்களையும்(இறைவன் நாடியபடி ) நட்டவர்கள் (கோமான் ஜமாத்தவர்கள்) மரங்களை பராமரிக்கும் பொறுப்புகளுக்கும் காரணமாகவேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்.அல்லாவிடில் பெருமைக்காக, பேருக்காக செய்த பலன் தான் கிடைக்கும். எதையும் இஃகுலாஸாக செய்ய வேண்டும். இவ்விசயங்களில் ஊரிலேயே தீவுத்தெரு ஒன்று தான் முன்னிலை என்றால் போய் பார்த்தால்தான் தெரியும்.
மரம் நட்டு வளர்ந்தபின் ஒரே ஒரு பூ, இலை, காய் ,பழம், பட்டை, மரம் பட்டு காய்ந்த பின்னும் மானிடர் மட்டுமல்ல மிருகங்களும் ஏன் பறவை கூட அனுபவித்தால் அதுவரைக்கும் ஃதவாபுகள்கிடைக்கும்,-நபி மொழி கருத்து .மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா? கொடிக்கீ காய் பாரமா, நட்டுவைத்த மரம்தான் நமக்கு பாரமா? அதுமட்டுமா? மஸ்ஜிதுகளை கட்ட அரும்பாடுபட்ட தியாகிகள் தொழுகையாளிகளை அதிகரிக்க பாடுபடவும் வேண்டும். சில இடங்களில் பள்ளியே கவலைப்படும் அதும் அல்லாஹ் உடைய படைப்புதானே. அல்லாஹ் உடைய படைப்புக்கு இக்றாம் செய்ய வேண்டாமா?.
நகரின் அனைத்து பகுதிகளிளும் மரங்களை நடும் பணிகளில் பெரும்பாலான அமைப்புகள் மிகவும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி கே.வி.ஏ.டி.அறக்கட்டளை சார்பில் நகரின் பல பகுதிகளில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன் தொடராக தற்போது துபாயில் செயல்பட்டு வரும் கோமான் நற்பணி மன்றத்தினருடன் கோமான் ஜமாஅத்தார்கள் இணைந்து கோமான் மேலத் தெரு, நடுத் தெரு, கீழத்தெரு மற்றும் பள்ளியின் உள் வளாகம் ஆகிய பகுதிகளில் 350 மரக்கன்றுகளை இதில் புங்கை, வேம்பு மற்றும் முருங்கை மரங்கள் அடங்கும். இம்மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கோமான் மொட்டையார் பள்ளியின் செயலாளர் ஜனாப்.என்.எம்.முஹம்மது இபுறாஹீம் அவர்கள் துவங்கி வைத்தார்கள்.
அல்லாஹ்(ஜல்). திருக் குற்ஆனில் கூறுகிறான்- மொழியாக்கம்
56:71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? 56:72. அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? 56:73. நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம். 56:74. ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக 30-1-2012=MDAY=6-3-1433
4. Re:கோமான் நற்பணி மன்றம் சார்... posted byVilack SMA (kayalpatnam)[31 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 16387
" மரத்தை நட்டவன் தண்ணி ஊத்துவான் " இந்த பழமொழி சும்மா ஒரு பேச்சுக்குத்தான் . உண்மையிலேயே , இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றப்போவது யார் ? இந்த மரம் பாதுகாப்பாக வளருமா ? ( பார்க்க கடைசி படம் , no fencing )
திட்டம் என்னவோ நல்ல திட்டம்தான் அதை முறையாக செய்யும்போது .
5. அனைத்து மரம்களும் உரிய முறையில் பாதுகாகபடும் posted byANSARI (abu dhabi)[31 January 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16391
அன்பின் காயல் மாநகர சகோதர்களுக்கு இங்கே நட்டபடும் அனைத்து மரம்களும் உரிய முறையில் பாதுகாகபடும் .கோமான் ஜமாத்தின் உள்ள அனைத்து மாதர்களும் இந்த மரத்தை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துள்ளார்கள் .அதோடு மட்டும் இல்லாமல் கோமான் நற்பணி மன்றம் & கோமான் ஜமாஅத் முலமாக ஒரு நபர் இந்த மரத்தை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துள்ளார்கள். எல்லா விசயங்களுக்கும் அல்லாஹ் பொறுப்பு எடுபானாக ஆமீன்.
6. Re:கோமான் நற்பணி மன்றம் சார்... posted byP.S.ABDUL KADER (JEDDAH,KSA)[31 January 2012] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16392
யாருமே தவமிராமல்
இயற்கை நமக்களித்த
வரங்கள்!
மரங்கள் !!
உலக உயீர்களையெல்லாம்
காத்துக் கொண்டிருக்கிற
கடவுள் நீட்டிய
கரங்கள் !
மரங்கள் !!
காற்று வரும் திசையை
நம் கண்களுக்கு உணர்த்தும்
கலங்கரை விளக்கம் !
மரங்கள் !!
உழைத்துக் களைத்த
உழவன்
உறங்கத் துடிக்கும்
தாய்மடி !
மரங்கள் !!
நம் சுவாசகாத்தை
சுத்திகரித்து அனுப்பும்
சுத்திகரிப்பு ஆலைகள் !
மரங்கள்!
தாயில்லா குழந்தைகளுக்கு
சேயில்லா தாய்தந்தையர்க்கும்
குடிசைகள் கூட இல்லா
ஏழைகட்கும்
தாயாய்.......சோயாய்
குடிசைகளாய்.........
மரங்கள் !!
அன்பாலும் கருணையாலும்
பிறரிடயன் தொட்ட
ஞானிகளைப் போல்
இதமான தென்றலால்
வான் மோகம்களை
வருடிக் கொடுத்து
மழைபொழிய வைக்கும்
மகாத்மாக்கள் !
மரங்கள் !!
செடியாய் கொடியாய்
இலையாய் பூவாய்
காயாய் கனியாய்
விதையாய் விறகாய்
சருகாய் மருந்தாய்
தன்னையே அற்பணிக்கும்
தியாகச் செம்மல்கள் !!
மரங்கள் !!
ஜாதிமத இனமொழி
வேறுபாடுஇன்றி
பாரினில் உயர்ந்த
நம் பாரத தேசத்தினைப் போல்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
உயிர்கள் அனைத்திற்கும்
அடைகலம் தரும்
ஆலயங்கள் !
மரங்கள் !!
மரங்களைப் பார்த்தாவது
மதம்கொண்ட மனிதர்களின்
மனங்கள் மாறட்டுமே!
7. Re:கோமான் நற்பணி மன்றம் சார்... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[31 January 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16403
கோமான் நற்பணி மன்றத்திற்கு பாராட்டுக்கள். அதிலும் கூடுதலாக மரத்தை பராமரிக்க பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நல்லவர்களையும் பாராட்டுகிறேன்.
தொடரட்டும் தங்களின் மக்கள் பணிகள்.
அன்பு நண்பன் P.S.அப்துல் காதர் அவர்கள் பதிவு செய்து இருந்த கவிதைகள் மிக அருமை. நெருடலுடன் பாராட்டுக்கள்.
இந்த கவிதைகளை எங்கோ படித்த ஞாபகம்... எஸ்..எஸ்.. முதல் கவிதை "திருமணத்திற்கு வாழை" - கவிஞர். இரா.இரவி அவர்களும், இரண்டாம் பதிவான " யாருமே தவமிராமல் " என்ற கவிதையை, கவிஞர் முனைவென்றி நா சுரேஷ்குமார் அவர்களும் எழுதியது. அவர்களுக்கு நன்றிகள்.
8. Re:கோமான் நற்பணி மன்றம் சார்... posted bySalai. Mohamed Mohideen (USA)[31 January 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 16405
கோமான் தெரு என்றாலே, காலாகாலமாக நடந்து வரும் கந்தூரியும் அதை சாட்டி நடக்கும் யானை சிலம்பாட்ட ஊர்வல கொண்டாட்டங்கள்..விபரம் அறியாத பருவத்தில், இவைகளை கண்டு களித்தது தான் இன்றும் ஞாபகத்துக்கு வருகிறது. கோமான் ஜமாத்தினரின் ஒற்றுமைக்கு எடுத்து காட்டாக ஒரு மனதாக நகர்மன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்ததும், இது போன்ற மரம் நடும் விழாக்களும்...ஊரில் உள்ள நம் அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் மற்றுமன்றி மனதில் செய்திகளின் வாயிலாக பதிந்துள்ள 'புதியன' என்றே சொல்லலாம். பாராட்டுகள் அன்புசச்சகோதர்களே!!
காடுகள் நாட்டின் கண்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பார்கள். இப்பொழுதெல்லாம் தெருவுக்கு ஒரு மரத்தை கூட பார்ப்பது அரிதாகி விட்டது. இதனால்
குளிர்விப்பான்களின் எண்ணிக்கையும் ஊரில் அதிகரித்து மின்பற்றக்குறையை மேலும் அதிகரித்து விட்டது.
பல வருடங்களுக்கு முன்பு வரை, பெரும்பாலான வீடுகளின் பின்புறம் ஒரு தோட்டம் இருக்கும். அதில் மரம், கொடி,செடி போன்றவைகளை பார்க்கலாம். ஆனால் இன்று தோட்டங்களும், காலி மனைகளும் வீடுகளாக மாறி வருகின்றது. இதற்க்கு மக்கள் தொகை பெருக்கம் ஒரு பக்கம் என்றாலும், மிக முக்கியமான காரணம்...நமதூரில் காலாகாலமாக புரையோடி கொண்டிருக்கும் "வீட்டோடு மாப்பிள்ளைக்காக" ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு வீடு கொடுத்தே ஆகவேண்டும் என்ற முறைதான். கேன்சரை விட மிக கொடிய இந்நோய் என்றுதான் நமதூரை விட்டு ஒழியுமோ.இதை பயன்படுத்தி பேராசை பிடித்த பெரும்பாலான நில புரோக்கர்கள் கொள்ளை லாபத்தில் (?) தங்கள் வயிற்றை நிரப்பியது தான் மிச்சம்.
பூமியில், கார்பன் ஆக்சிஜன் விகிதாச்சாரத்தை சமன் செய்யப் போராடுவது மரங்கள் ஒன்று மட்டுமே!
கனடா நாட்டின் சுற்றுப்புற சூழல் நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க இது போதுமானதாகும். இக்கால கட்டத்தில் கூட இத்தாலில் உள்ள மிலன் என்ற இடத்தில், போஸ்கோ வெர்டிகல் (Bosco Verticale) என்ற கட்டிடம் 27 மாடிகளுடன் கான்கிரீட் காடாக வடிவமைக்கப்பட உள்ளது. மக்கள் பயனுற செய்யும் மூன்று நிலையான தர்மங்களில் ஒன்று நிழல் தரும் மரம் நடுவது. மறைந்த பிறகும் நமக்கான நன்மைகளை தேடித் தரும். சூழலுக்கு/இடத்துக்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்வது அவசியம். மரத்தை/செடியை நட்டபின் அதை பாதுகாக்க அதை சுற்றி ஒரு சிறு வேலி அமையுங்கள். சிறுவர்களை ஆர்வபடுத்தி மரங்களை நேசிக்க கற்று கொடுக்கவேண்டும். மரம்/செடி வளர்ப்பது மிக சிரமம் என்று எண்ணினால், ஒரு தண்ணீர் பாட்டில் அல்லது பிளாஸ்டிக் வாளி போதும். அதை வெட்டி ஒவ்வொரு வீட்டிலும் தொங்க விட்டு அதிலும் செடிகள் வளர்க்க முயற்சிக்கலாம்.
தண்ணீரை கூட காசு கொடுத்து வாங்க இந்த தலைமுறை தள்ளப்பட்டுள்ளது போல், எதிர்கால தலைமுறை "காற்றுக்கும்" காசு என்ற சூழ்நிலை உருவாகாமல் தடுப்போம். ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று இயற்கை ஆர்வலர்கள் இருந்தால் போதும்...பசுமையான காயலை உருவாக்க!!
9. Re:கோமான் நற்பணி மன்றம் சார்... posted bySalai.Mohamed Mohideen (USA)[01 February 2012] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 16406
என்னுடைய முந்திய கமண்டை பதிவு செய்த பின், ஊரில் உள்ள ஒரு சில நண்பர்களிடம் இந்த 350 மரங்கள் நடும் விழா போன்று எல்லா தெருக்களிலும்/சுற்று வட்டாரங்களிலும் இது போல நட வேண்டும் என்று பெருமையாக பேசி கொண்டிருந்த போது... நான் கேள்வி பட்ட ஒரு விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த மரங்கள்/செடிகள் அனைத்தும், தனது நச்சுகழிவுகளால் நாம் சுவாசிக்கும் காற்றையும் நமது கடலையும் மாசுபடுத்தியதோடு மட்டுமில்லாமல் கேன்சர் என்னும் உயிர் கொல்லி நோய் நமதூரில் பரவலாக பரவ முக்கிய காரணகர்த்தாவாக இருக்கும் அந்த நாசக்கார தொழிற்சாலை நிறுவனத்தினர், நமதூரில் (அக்கம் பக்கத்து ஊர்களில் கூட) இது போன்று மரக்கன்ரூகளை வாரி வழங்கி, எதோ இயற்க்கையின் மீதும்... நமது மக்களின் மீதும் அக்கறை உள்ளவர்கள் போல தந்துதவுவதாகவும், அதையும் அப்பாவி மக்கள் சூது அறியாமல் வாங்கி நடுவதாகவும் அறிந்தேன். அது இவ்விசயத்தில் உண்மையாக இருக்ககூடாது என்று விரும்புகிறேன்.... நம்புகிறேன்.
இயற்கையை மற்றும் மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் இவர்களுக்கு, இப்படி ஊர் ஊரா மரத்தை நட்டோம்... தொழிற்சாலை அமைந்துள்ள சுற்று வட்டார ஊறுகளுக்கு இலவச மருத்துவ முகாமை நடத்தினோம் என்று ஊரையும், அப்பாவி பொதுமக்களையும், அரசாங்கத்தையும் ஏமாற்ற ஒரு வியாபார தந்திரம். இதில் எவரும், இவர்களுடைய அற்ப உதவிக்கு (கண்துடைப்பு) பலியாகிவிடக்கூடாது.
நான் யாருடைய நற்செயலையும் குறை கூற/களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதை பதியவில்லை. அறியாமையினால், நாம் இந்நாசக்கார தொழிற்சாலை நிறுவனத்தினர் சூழ்ச்சியில் பலியாகிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இக்கருத்தை பதிவு செய்கிறேன். அல்லாஹ் எல்லாவற்றிட்க்கும் போதுமானவன். நம் அனைவரையும் அவன் பாதுகாப்பானாக!!
10. Re:கோமான் நற்பணி மன்றம் சார்... posted byமுனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி)[14 July 2012] IP: 182.*.*.* India | Comment Reference Number: 19993
ஐயா, என் பெயர் முனைவென்றி நா சுரேஷ்குமார். தங்களுக்கு நான் என்னுடைய கவிதைகளை அனுப்பவில்லை. என்னுடைய கவிதைகள் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது? தங்களின் நற்பணி சிறக்க என் வாழ்த்துகள். தங்களைப் பற்றிய முழு விபரங்களை அறிய ஆவல். இணையப்பக்கங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
நன்றி.
--
=================
= அன்பே கடவுள் =
=================
முனைவென்றி நா சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி - 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8754962106.
------------------------------------------------------------------
Munaivendri N. Sureshkumar,
S/O T. Nagarajan,
2/218, kalyana sundaram pillai compound,
Gandhiji Road,
Paramakudi - 623707,
Ramanathapuram District,
Tamilnadu.
Mobile: 8754962106.
http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross