காயல்பட்டினம் சின்ன நெசவுத் தெருவில் செயல்பட்டு வரும் கேர் அன் க்யூர் மெடிக்கல் சென்டர் சார்பில், குழந்தைகள் நல இலவச மருத்துவ முகாம் இம்மாதம் 29ஆம் தேதியன்று (நாளை) காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் வெங்கட்ரமணன் இம்முகாமில் கலந்துகொண்டு, குழந்தைகள் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கவுள்ளார்.
முன்பதிவு செய்யும் 80 குழந்தைகளுக்கு மட்டும் இம்முகாமில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுக்கு சபைர் மெடிக்கல் - யை தொடர்பு கொள்ளவும். தொலைப்பேசி எண் - 280 367.
கேர் அன் க்யூர் மெடிக்கல் சென்டரில், மூட்டு மாற்று மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முஹம்மத் ஜுபைர், வாரந்தோறும் புதன்கிழமையிலும்,
மனநல மருத்துவர் டாக்டர் அப்துல் ரஹ்மான், மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளிலும்,
ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஆர்.ராஜேஷ், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளிலும்,
பல் மருத்துவர் டாக்டர் சுலைமான் தினந்தோறும் சிகிச்சையளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
[செய்தி திருத்தப்பட்டது @ 7:00pm/January 28, 2012] |