இந்திய குடியரசு தினத்தையொட்டி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடத்தப்ப்ட மாநில அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி, இறுதிப்போட்டி வரை முன்னேறி, வெற்றிவாய்ப்பை இழந்ததால் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது.
இச்சாதனையை வாழ்த்தி, அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்தறிக்கை பின்வருமாறு:-
இந்திய குடியரசு தினத்தையொட்டி, நெல்லை அண்ணா விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட - 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்து, நம் பள்ளிக்கும், நமதூருக்கும் பெருமை சேர்த்துத் தந்த வீரர்களை மனதாரப் பாராட்டுகிறோம், எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!
இந்த மாபெரும் சாதனைக்கு ஊக்கமளித்த தலைமையாசிரியர் மற்றும் நிர்வாகத்தினரையும், பயிற்சியளித்த பயிற்சியாளர்களையும், உறுதுணை புரிந்த உடற்கல்வி ஆசிரியர்களையும் நாங்கள் மனதார வாழ்த்துகிறோம்.
இவ்வாறு, எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |