ஜித்தா, சவுதிஅரேபியா - ஜித்தா தமிழ் மன்ற நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடந்தது. இதில் புதிய தலைவராக காயல்பட்டினம், கே.டி.எம்.தெருவை சார்ந்த எம்.எம்.மூசா சாஹிப் (மீரான் மூசா) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த பதவிக் காலம் ஓராண்டாகும்.
இவர்- ஆரம்ப காலம் முதல் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும், ஜித்தா -தப்றேஜ் (TAFAREG) அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும்
மற்றும் புனித மக்காவில் புனித ஹாஜிகளுக்கு சேவை செய்து வரும் இந்திய புனித பயணிகள் நற்சேவை அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கின்றார்.
ஜித்தாவில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகமான இவர், இது போன்ற பல நலஅமைப்புகளிலும், தமிழ் அமைப்புகளிலும் உறுப்பினராக
இருப்பதுடன் நற்சேவை புரிந்து வருகின்றார். ஜித்தா தமிழ் மன்ற புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டமைக்கு பெரும்பான்மையான காயலர்கள் மற்றும் தமிழர்கள் அனைவரும் வாழ்த்தினை பகிர்ந்து கொண்டார்கள்.
இவரது பதவி காலத்தில் கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் நற்சேவை ஆற்றிட நன்றியுடன் வேண்டி கொண்டார்கள். இது சம்பந்தமான செய்தி இந்நேரம்,ஒன் இந்தியா மற்றும் தினமலர் வலை தளங்களிலும் வெளி வந்துள்ளன.
தகவல்:
சட்னி .எஸ்.எ.கே.செய்யது மீரான்,
ஜித்தா-சவுதிஅரேபியா
|