மும்பையில் நடைபெற உள்ள கராத்தே போட்டிகளில் மாணவர்கள் கலந்துக்கொள்ள பொருளாதார உதவிக்கோரி கராத்தே மாஸ்டர் ஏ.இர்பான் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
மும்பையில் வரும் பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சர்வதேச கராத்தே போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர்,நேபால், பூடான் ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றன.
இந்த போட்டிகளில் காயல்பட்டினம் சார்ந்த 7 மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:-
(1) அப்துல் ஹகீம் - 14 வயது (சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி)
(2) அப்துல் ரஷீத் - 13 வயது (சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி)
(3) அப்துல்லாஹ் - 5 வயது (அல் அமீன் பள்ளி)
(4) மரியம் முர்ஷிதா - 7 வயது (ரஹ்மானியா பள்ளி)
(5) ஆறுமுகராஜா - 15 வயது (சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி)
(6) சிவரஞ்சன் - 13 வயது (சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி)
(7) முஹம்மது மஹ்ரூப் - (முஹைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி)
(8) இர்பான் கராத்தே மாஸ்டர் (மாஸ்டர் பிரிவு)
திறமை வாய்ந்த இந்த வீரர்கள் பொருளாதார வசதி இல்லாமையால் இப்போட்டிகளில் கலந்துக்கொள்ள சிரமப்படுகிறார்கள்.
மும்பை செல்ல டிக்கெட் மட்டும் இவர்கள் முன்பதிவு செய்துள்ளார்கள். போட்டி நுழைவு கட்டணமாக ஒரு மாணவருக்கு, ரூபாய் 1600 வீதம் வேண்டியுள்ளது. மேலும் மும்பையில் 4 நாட்கள் தங்க வேண்டியுள்ளது. தாங்கும் செலவு, சாப்பாடு செலவு, இதர செலவீனங்கள் என்று இருக்கிறது. எனவே இந்த மாணவர்களுக்கு அனுசரணை செய்யும்ப்படி தங்களை அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
இவண்,
சென்செய் ஏ.இர்பான்.
தொலைப்பேசி எண்: 99656 50008
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |