இந்தியாவின் 63ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இன்று காலையில், காயல்பட்டினம் நகராட்சியின் அலங்கரிக்கப்பட்ட வளாகத்தில், குடியரசு தின விழா நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, நகராட்சியின் குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துனர் (ஃபிட்டர்) நிஜார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர் தேசிய கொடியேற்றப்பட்டது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா தேசிய கொடியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து, நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பினர்களான இ.எம்.சாமி, கே.ஜமால், ஏ.ஹைரிய்யா, எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன், ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் குடியரசு தின வாழ்த்துக் கவி வாசித்தார். பின்னர், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஒருமைப்பாட்டு உறுதிமொழியை முன்மொழிய, விழாவில் கலந்துகொண்ட அனைவரும் அதை வழிமொழிந்தனர்.
அடுத்து, அனைவரும் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடலைப் பாடினர்.
நிறைவாக, நகராட்சி சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், ஜே.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஆர்.பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரும், நகர்மன்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்களும், சென்ட்ரல் மேனிலப்பள்ளி மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா இனிப்பு வழங்கினார்.
|