சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் மார்க்கத்தில் தினமும் செந்தூர் விரைவு வண்டி இயக்கப்படுகிறது. அவ்வண்டியில் - கூடுதலாக ஒரு பெட்டி (Sleeper) இணைக்கப்படவுள்ளது. திருசெந்தூரில் இருந்து புறப்படும் இவ்வண்டியில் (16736) நாளை (ஜனவரி 26) முதல் கூடுதல் பெட்டி (Sleeper) இணைக்கப்படும். சென்னையில் இருந்து புறப்படும் இவ்வண்டியில் (16735) - ஜனவரி 29 முதல் - கூடுதலாக ஒரு பெட்டி (Sleeper) இணைக்கப்படும்.
செந்தூர் விரைவு வண்டி தற்போது - 16 பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகிறது (4 - Unreserved, HA1, A1, B1, SLR [2], S1 - S7).
மேலும் - வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை, திருசெந்தூரில் இருந்து சென்னை வரும்போது, சிதம்பரத்திற்கு அடுத்து திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் செந்தூர் விரைவு வண்டி நின்று செல்லும். சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் போது, விழுப்புரத்திற்கு அடுத்து, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் - பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 வரை - நின்று செல்லும்.
[செய்தி திருத்தப்பட்டது @ 10:00pm/25.01.2012] |