காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்துவதென கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், முதல் கூட்டம் இன்று மதியம் 03.00 மணிக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து, காயல்பட்டினம் நகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நமது காயல்பட்டினம் நகராட்சி மூலம் பொதுமக்கள் பெறும் சான்றிதழ்கள், கட்டிட அனுமதி மற்றும் பல்வேறு வகையான நகராட்சி சேவைகளில் தீர்வு காணப்படாது குறைகளிருப்பின், அவற்றுக்கான தீர்வை விரைந்து செயல்படுத்தி வழங்கிடும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்திட, நமது நகர்மன்றத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கூட்டம், இந்த மாதம் இறையருளால் வரும் புதன்கிழமை (25.01.2012) மாலை 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நமது நகராட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி பலன் பெற கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |