காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் அழைப்புப் பணி பயன்பாட்டிற்காக புதிய வாகனம் வாங்குவது குறித்த கோரிக்கை அண்மையில் அந்நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டிருந்தது.
புதிய வாகனம் வாங்குவதற்கான தொகை, பங்கொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் நூறு பங்குகளாகப் பிரித்து, நற்கூலிக்கான பங்குதாரர்கள் எதிர்பார்க்கப்படுவதாக அப்போது அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், இதுவரை 48 பங்குகள் பெறப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பங்குகளுக்கு நன்கொடையாளர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிலையான தா;மத்திற்க்கு இன்னும் நீங்கள் தயாராக வில்லையா?
அன்பின் சகோதர,சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
நமது தஃவா சென்டா; பணிகள் பற்றி தாங்கள் அறிந்ததே. தாமாக முன்வந்து இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியல் நெறியாக்க்கி கொண்ட மக்களுக்கு 100 நாட்கள் அடிப்படைக் கல்வி, முஸ்லிமல்லாதோருக்கு இஸ்லாமை அதன் தூய வடிவில் சிறு சிறு கிராமங்களில் எடுத்துரைக்கும் பணியையும் செய்து வருவது தாங்கள் அறிந்ததே.
முதலில் நாம் கிராமங்களுக்கு தஃவா செய்திட வாடகை வேன் மூலமாக சென்று வந்தோம். பின் நமது சகோதரர்களின் மூலம் வேன் சொந்தமாக கிடைக்கப் பெற்று அதன் மூலம் 3 நாள் ஆண்கள் தஃவாவும், 1 நாள் பெண்கள் தஃவா செய்து வந்தோம் அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நமது வேன் பழுதானதன் காரணமாக இரண்டு மாதங்களாக 1 நாள் பெண்கள் தஃவா செய்ய முடியவில்லை. மேலும் டிசம்பர் மாத 3 நாள் ஆண்களுக்கான தஃவாவை செய்தாக வேண்டும் என்ற தீர்மானத்துடன் பேருந்து, ரயில், வாடகை கார் ஆகிய வாகனங்களில் சென்று தஃவா செய்தது எல்லாம் தாங்கள் அறிந்ததே.
இதனைக் கருத்தில் கொண்டு நாம் புதிய வேன் வாங்கிட இணையதளத்தின் மூலம் வெளியிட்டிருந்த செய்தியான ரூ10,000 வீதம் 100 நபர்களான மறுமைக்கான ஷேர் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 42 மறுமைக்கான ஷேர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 58 நன்மையான ஷேர்கள் உங்களில் யாரை வந்தடைய போகிறதோ?
இந்த நிலையான தர்மத்திற்க்கு தாங்களும் உதவி செய்து மற்றவர்களையும் உதவி செய்யத் தூண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் நாம் இந்த மாதம் செல்ல இருக்கும் தஃவாவிற்க்கு பஸ் பயணத்தின் மூலம் தஃவா செய்ய முடிசெய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் வருகிற மாதத்திலாவது நமது செந்த வாகனத்தில் சென்று தஃவா செய்திட உதவிடக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |