Good Governance India Foundation நிறுவனம் - ஏற்பாட்டில் வருடம் ஒருமுறை நடைபெறும் - இந்திய நகரங்களின் நிர்வாகம் குறித்த மாநாடு மற்றும் கண்காட்சி - Municipalika - ஜனவரி 23 அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள Chennai Trade Centre இல் துவங்கியது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் - தமிழ் நாடு மற்றும் இந்தியாவின் பிற நகரங்களின் மேயர்கள்/தலைவர்கள்/ஆணையர்கள் உட்பட இத்துறை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். காயல்பட்டினம் நகர்மன்ற தலைவர் ஐ.ஆபிதாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டார்.
துவக்க விழா நிகழ்ச்சியில் மாநில முனிசிபல் நிர்வாக அமைச்சர் கே.பி.முனுசாமி, வீடு வசதி துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் IAS, பிரிட்டன் நாட்டின் துணைத் தூதர் மைக் நிதவரையன்கிஸ், நகர்புற துறை செயலர் பனிந்திர ரெட்டி IAS உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டின் ஓர் அங்கமாக நடைபெற்ற கண்காட்சியில் நகரங்கள் பராமரிப்பு சம்பந்தமான புதிய தொழில்நுட்பங்கள் இடம்பெற்றிருந்தன. குப்பைகள் பராமரிப்பு மற்றும் தெரு விளக்குகள் துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் கண்காட்சியில் குறிப்பிடதக்க அம்சங்கள்.
கீழக்கரை நகர்மன்றத் தலைவர் ராபியத்துல் காதரியா உடன் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ...
இம்மாநாட்டிற்காக சென்னை வந்திருந்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் - சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் IAS யிடமும், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே IAS யிடமும் கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
அதில் - நகர்மன்றத்தில் உள்ள காலி இடங்களை விரைவில் நிரப்பக்கோரி நவம்பர் மாதம் நேரிலும், கடிதம் மூலமும் - நகர்மன்றம் சார்பாக தான் முன்வைத்த கோரிக்கைகளை நினைவுகூர்ந்து, அதனை துரிதப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். மேலும் - இரண்டாம் குடிநீர் பைப்லைன் திட்டத்தை விரைவாக அமல்படுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். |