இந்தியாவின் 63ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில் இன்று காலையில், அதன் அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமை தாங்கினார். நகர்நல ஆர்வலர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, பொதுநல ஆர்வலர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருச்செந்தூர் போக்குவரத்து துணை ஆய்வாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் தேசிய கொடியேற்றி வைத்தார்.
அறக்கட்டளையின் ஆலோசகர் கவிமகன் காதர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் முஹம்மத் அப்துல் காதிர் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். அதன் செய்தித் தொடர்பாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் வரவேற்புரையாற்றினார்.
பின்னர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மற்றும் குழுவினர் இணைந்து, தேசிய ஒருமைப்பாட்டு பாடல் பாடினர்.
துஆவுக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில் காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜே.அந்தோணி, கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், இ.எம்.சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, அறக்கட்டளை மேலாளர் ஆஷிக் செய்திருந்தார். |