இந்தியாவின் 63ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதர் ஸாஹிப் தலைமையில், இன்று காலை 08.30 மணிக்கு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தமிழாசிரியை ஹஸீனா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, கணித ஆசிரியை க.பீர் ஃபாத்திமா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா தேசிய கொடியேற்றி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், சுபைதா துவக்கப்பள்ளி, மேனிலைப்பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் இசையாசிரியை பேபி லதா தலைமையில், கொடி வாழ்த்துப்பாடல் பாடப்பட்டது.
ஆசிரியை ஜெனிட்டா தேவகிருபாவதி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளி மாணவியரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
ஃபாஸில் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |