இந்தியாவின் 63ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதுபோல, சர்வதேச நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களிலும் தேசிய கொடியேற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்தில் இன்று காலை 08.30 மணிக்கு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தூதரக உயரதிகாரி அஷோக் கந்தா தேசிய கொடியேற்றி வைத்து, அணிவகுப்பு மரியாயை ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவில், இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான், செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஹாஜி எம்.என்.சுலைமான் குடும்பத்தினர், ஹாஜி காணி மிஸ்கீன் சாஹிப் குடும்பத்தினர், ஹாஜி மக்கி நூஹுத்தம்பி, ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அலீ, ஜித்தா காயல் நல மன்ற உறுப்பினர் ஜி.எம்.சுலைமான், ஹாஜி ஸயீத் உள்ளிட்ட திரளான காயலர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
விழா நிறைவுற்ற பின்னர் அவர்கள் தூதரக உயரதிகாரியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஜி B.M.ரஃபீக்,
மற்றும்
ஹாஜி O.L.M.ஆரிஃப்,
கொழும்பு, இலங்கை. |