இன்று (ஜனவரி 26) இந்திய நாட்டின் 63வது குடியரசு தினம் (Republic Day) ஆகும். நாடு முழுவதும் இத்தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தமிழக தலைநகர் சென்னையில் - வழமைபோல் - மெரினா கடற்கரையில் மாநில அரசின் சார்பாக குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கவர்னர் ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதைத் தொடர்ந்து நடந்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்புகள் நடந்தன.
புகைப்படம்:
தி ஹிந்து
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா மாவட்ட விளையாட்டரங்கில் நடந்தது. ஆட்சியர் ஆஷிஷ்குமார் தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross