இந்தியாவின் 63ஆவது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், 26.01.2012 அன்று (நேற்று) காலை 08.30 மணிக்கு குடியரசு தின விழா நடைபெற்றது.
பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் தேசியக் கொடியேற்றி, விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ், செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.எம்.கலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பள்ளியின் வணிகவியல் முதுகலை முன்னாள் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ நாட்டுப்பற்றுப் பாடல் பாடினார். ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, ஹாஜி எல்.டி.இப்றாஹீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளியின் உயிரியல் துறை முதுகலை ஆசிரியர் செய்யித் அஹ்மத் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், சில பெற்றோர், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
அஹ்மத் மீராத்தம்பி,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |