தமிழ்நாட்டிலுள்ள தனியார் ஹஜ் குழுக்கள் அனைத்தையும் இணைத்து செயல்பட்டு வரும் அமைப்பு, தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கம் (Tamilnadu Haj Organisers Association - THOA) ஆகும்.
இவ்வமைப்பின் பொருளாளராக அல்ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸ் ப்ரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான, காயல்பட்டினத்தைச் சார்ந்த ஹாஜி அ.அபுல்ஹஸன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
24.01.2012 அன்று சென்னை எழும்பூர் ரீகல் ஹோட்டல் மஹாலில் தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அமைப்பு நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவுற்றதால், புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு நடைபெற்ற இப்பொதுக்குழுக் கூட்டத்தில் பின்வருமாறு நிர்வாகிகள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
ஹாஜி முஹம்மது அலி (அல் நூர் ஹஜ் சர்வீஸ்)
துணைத்தலைவர்:
ஹாஜி மின்னூர் ஸலீம் (ஸலீம் ஹஜ் சர்வீஸ்)
செயலாளர்:
ஹாஜி முஹம்மது இக்பால் (அல் ஹரமைன் ஹஜ் சர்வீஸ்)
துணைச்செயலாளர்:
ஹாஜி பதுருத்தீன் (டால்பின் ஹஜ் சர்வீஸ்)
பொருளாளர்:
ஹாஜி அ.அபுல்ஹஸன் (அல் ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸ் (பி) லிட்.)
மேலும், ஒன்பது பேர் போட்டியிட்டதில் அறுவர் செயற்குழு உறுப்பினர்களாகவும், அந்த செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில், இருவர் செயற்குழுவின் நியமன உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள், இரண்டு வருடம் அவர்கள்தம் பொறுப்புகளில் இருப்பர். சற்றொப்ப நூறு நிறுவனங்கள் பதிவுசெய்து கொண்ட இந்த சங்கத்தின் சட்டப்படி, வாக்களிக்க உரிமை பெற்ற 43 நிறுவனங்களில், 42 ஹஜ் சர்வீஸ் உரிமையாளர்கள் புதிய நிர்வாகத் தேர்தலில்
வாக்களித்தனர்.
தேர்தல் அதிகாரிகளாக ஹாஜி ஆ.சுல்தான் ஜியாவுத்தீன் (எஸ்.எம்.கே. ஹஜ் சர்வீஸ்) ஹாஜி பாவா பக்ருத்தீன் (நுஸ்ரத் ஹஜ் சர்வீஸ்) ஆகியோர் பணியாற்றினர். வருகை தந்திருந்த உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் சங்க நிர்வாகத்தின் சார்பில் விருந்துபசரிப்பு நடைபெற்றது.
ஆற்றிய அரும்பணிகளுக்காக, முந்திய நிர்வாகத்தினருக்கு பாராட்டுடன் நன்றியும், புதிய நிர்வாகத்தினருக்கு வரவேற்புடன் வாழ்த்துக்களும் சங்கத்தின் பொதுக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தகவல்:
சாரா மைந்தன் (சென்னை)
மூலமாக,
ஹாஜி N.T.முஹம்மத் இஸ்மாயில் புகாரீ,
இயக்குனர், அல்-ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸ் ப்ரைவேட் லிமிட்டெட்,
(தலைமை அலுவலகம்) காயல்பட்டினம். |