காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழா வரும் பிப்பரவரி மாதம் முதல் தேதி முதல் மூன்றாம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் துவங்கின. காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில், டைமண்ட் அணியும், எமரால்ட் அணியும் மோதின. ஆட்டத்தின் முதற்பாதியில், எமரால்ட் அணி வீரர் வாஸிஃப் அடித்த கோல் மூலம் அந்த அணி முன்னிலை பெற்றது. பிற்பாதியில், டைமண்ட் அணி வீரர் ரிஃபாய் தொடர்ச்சியாக இரண்டு கோல்கள் அடித்ததால் அவ்வணி வெற்றி பெற்றது.
மற்றோர் ஆட்டத்தில், ஸஃபையர் அணியும், ரூபி அணியும் மோதின. இப்போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ரூபி அணி வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
இறுதிப்போட்டியில் ரூபி அணியும் டைமண்ட் அணியும் களம் கண்டன. எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் இப்போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பரபரப்புடன் நடைபெற்ற இவ்விறுதி ஆட்டத்தில், ரூபி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டி நடுவர்களாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜமால் முஹம்மத், முன்னாள் மாணவர்கள் முஹம்மத் இஸ்மாஈல் மற்றும் இஸ்மாஈல் ஆகியோர் கடமையாற்றினர்.
தகவல்:
அஹ்மத் மீராத்தம்பி,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |