காயல்பட்டினம் நகர்மன்றத்தில் ஐ.ஆபிதா தலைமையிலான நகர்மன்றம் பொறுப்பேற்று நாளை (பிப்ரவரி 02ஆம் தேதி) நூறாவது நாளாகும்.
இதனை முன்னிட்டு, தனது தேர்தல் அறிக்கையில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தெரிவித்தபடி ‘பசுமை காயலை‘ உருவாக்க நகர் முழுக்க மரம் நட நகர்மன்றத் தலைவர் திட்டமிட்டு, அதற்கென நடத்தப்படும் எளிய விழாவில் கலந்துகொள்ள வருமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரை அவர் நேரில் அழைத்ததன் அடிப்படையில், விழாவில் கலந்துகொள்ள அவரும் இசைவு தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், 31.01.2012 அன்று நடைபெற்ற நகர்மன்ற மாதாந்திர கூட்டத்தின் இறுதியில், மேற்படி விழாவில் கலந்துகொள்ள வருமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நாளான பிப்ரவரி 02ஆம் தேதியன்று (நாளை) மாவட்ட ஆட்சியருக்கு தவிர்க்கவியலாத வேறு பணிகள் இருப்பதால் மற்றொரு தினத்தில் வருவதாகத் தெரிவித்ததாகவும், அதனடிப்படையில் நாளை நடைபெறவிருந்த மரம் நடுவிழாவை - மாவட்ட ஆட்சியர் வருகையையறிந்து, வேறு தேதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. |