காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் - KCGC சார்பில் நடத்தப்பட்ட நேர்காணல்களை எதிர்கொள்வதெப்படி என்ற தலைப்பிலான கருத்தரங்கில், பல துறைகளைச் சார்ந்த காயல்பட்டினம் மாணவர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் வசிக்கின்ற - சென்னைக்கு வருகின்ற காயல்பட்டினம் நகர மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தகுந்த வழிகாட்டுதலை அளித்திடும் பொருட்டு அண்மையில் துவக்கப்பட்ட அமைப்பு காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC).
அவ்வமைப்பின் வேலைவாய்ப்பு குழுவின் ஏற்பாட்டில் 26.01.2012 வியாழக்கிழமையன்று மாலை 04.30 மணியளவில், “நேர்காணல்களை எதிர்கொள்வது எப்படி? (INTERVIEW TECHNIQUES)” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இந்தியா முழுவதிலும் 10 அலுவலகங்களைக் கொண்ட – நாட்டின் பல முன்னணி நிறுவனங்களுக்கு பலதரப்பட்ட சேவைகளை வழங்கிவரும் Synergy Business Management Solutions என்ற நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான சக்கரவர்த்தி இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நேர்காணலை சந்திப்பதற்கான நடைமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் உரையாக வழங்கினார்.
சிறப்பு விருந்தினருக்கு, குளம் இப்றாஹீம் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். பாளையம் சுலைமான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மருத்துவம், ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங், எம்.பி.ஏ. உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த - காயல்பட்டினத்தைச் சார்ந்த 14 மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர். எம்.என்.அப்துல் காதிர் முத்துவாப்பா நன்றி கூறினார்.
தகவல்:
A.H.M.முக்தார் B.Com.,
செய்தித் தொடர்பாளர்,
காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் - KCGC. |