மது மற்றும் புகையிலை பொருட்கள் போன்று - சர்க்கரையும் அதிகம் பாதிப்புகள் ஏற்படுத்தும் தன்மை கொண்டது என அமெரிக்க வல்லுனர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் குழுவினை சார்ந்த ராபர்ட் ஹெச். லஸ்டிக், லாரா ஏ. ஸ்மிட்த் மற்றும் கிளேர் டி. பிராண்டிஸ் ஆகியோர் - அமெரிக்காவில் இருந்து வெளியாகும் Nature என்ற
பத்திரிக்கையில் - The toxic truth about sugar என்ற தலைப்பில் - தங்கள் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அந்த ஆய்வறிக்கையில் - அதிகம் சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய தீமையினை எதிர்கொள்ள புதிய மக்கள் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்
என கூறப்பட்டுள்ளது. டென்மார்க் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் அதிக கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்வதை குறைக்க அப்பொருட்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அது போல - பிரான்ஸ் நாட்டில் குளிர் பானங்கள் மீதான வரிகள் -அப்பொருட்களால் உடலுக்கு பாதிப்புகள் அதிகம் என்பதால் - உயர்த்தப்பட்டுள்ளன. அதுபோல சர்க்கரை மற்றும் சர்க்கரையை அடிப்படையாக கொண்டுள்ள பொருட்கள் மீதான வரியினையும் அரசாங்கங்கள் உயர்த்தவேண்டும் என இவ்வாய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் சர்க்கரை பயன்பாடு உலகம் முழுவதும் - மூன்று மடங்கு பெருகியுள்ளதாகவும், உடல் பருமன், உயர்ந்த இரத்த அழுத்தம்
மற்றும் சர்க்கரை நோய் - ஆகியவை பெருகியிருப்பதற்கும், சர்க்கரை பயன்பாடு உயர்ந்திருப்பதற்கும் தொடர்பு இருப்பதாக மேலும் இவ்வாய்வறிக்கை
தெரிவிக்கிறது.
மது மற்றும் புகையிலை பொருட்கள் போன்று - சர்க்கரையும் அதிகம் பாதிப்புகள் ஏற்படுத்தும் தன்மை கொண்டது என வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
ஆகவே அவைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல் - சர்க்கரை பொருட்கள் குறித்தும், சமுதாயம் திட்டங்களை விரைவில்
வகுக்கவேண்டும் என அவ்வாய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தகவல்:
பி.பி சி.இணையதளம்
|