நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு இம்மாதம் 05ஆம் தேதியும், வடலூர் இராமலிங்கர் எனும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு இம்மாதம் 07ஆம் தேதியும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகளனைத்தையும் மூட, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
நபிகள் நாயகம் பிறந்த தினம் (மீலாடி நபி தினம்) 05.02.2012 மற்றும் வடலூர் இராமலிங்கர் நினைவு நாள் (வள்ளலார் நினைவு தினம்) 07.02.2012 ஆகிய இரு தினங்களை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)இன்படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் அதனுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால், அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது. மேலும் டாஸ்மாக் பார்கள் எதுவும் செயல்படக் கூடாது.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கடத்துதல், மதுபானத்தைப் பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள்ப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செயதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |