தமிழக அரசு - மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திற்கும், அதன் தகுதி - மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் - ஒவ்வொரு மாதமும் மானியம் வழங்கிவருகிறது. இம்மானியமே - உள்ளாட்சி மன்றங்களின் வருவாயில் பெரும் பங்கினை வகிக்கிறது.
நடப்பாண்டில் (2011 - 2012) - டிசம்பர் 2011 முடிய - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 1 கோடியே , 76 லட்சத்து , 47 ஆயிரத்து 527 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 31 லட்சத்து , 12 ஆயிரத்து 263 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 1 கோடியே , 45 லட்சத்து , 35 ஆயிரத்து 264 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாதம் வாரியாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட தொகை விபரம்
ஏப்ரல் 2011 - ஜூன் 2011
அரசு உதவி தொகை (A) - 58,18,413
பிடித்தம் (Deductions) (B) - 5,81,534
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 52,36,879
ஜூலை 2011
அரசு உதவி தொகை (A) - 19,71,519
பிடித்தம் (Deductions) (B) - 1,57,229
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 18,14,290
ஆகஸ்ட் 2011
அரசு உதவி தொகை (A) - 19,71,519
பிடித்தம் (Deductions) (B) - 7,58,036
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 12,13,483
செப்டம்பர் 2011
அரசு உதவி தொகை (A) - 19,71,519
பிடித்தம் (Deductions) (B) - 1,85,424
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 17,86,095
அக்டோபர் 2011
அரசு உதவி தொகை (A) - 19,71,519
பிடித்தம் (Deductions) (B) - 1,37,365
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 18,34,154
நவம்பர் 2011
அரசு உதவி தொகை (A) - 19,71,519
பிடித்தம் (Deductions) (B) - 9,54,701
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 10,16,818
டிசம்பர் 2011
அரசு உதவி தொகை (A) - 19,71,519
பிடித்தம் (Deductions) (B) - 3,37,974
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 16,33,545
மொத்தம் (ஏப்ரல் 2011 - டிசம்பர் 2011)
அரசு உதவி தொகை (A) - 1,76,47,527
பிடித்தம் (Deductions) (B) - 31,12,263
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 1,45,35,264
தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.
Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:00 am/3.2.2012 |