மூன் டிவி நடத்திய - “சிறந்த ஹாஃபிழ் யார்?” என்ற தலைப்பிலான - மாநிலம் தழுவிய மறை குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற மாணவரைப் பாராட்டும் விழாவாக நடந்தேறியுள்ளது மலபார் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டம். திரளான காயலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் செய்திதொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 7ஆவது பொதுக்குழுக் கூட்டம் 29.01.2012 அன்று மாலை 05.30 மணியளவில், சகோதரர் நெய்னா காக்கா அவர்களின் வீட்டு மொட்டை மாடியில் வைத்து நடைபெற்றது.
கூட்டம் துவங்குவதற்கு முன்னரே கூட்டம் நடைபெறும் இடத்தில அனைவரும் சங்கமித்திருந்தனர்.
கூட்ட நிகழ்வுகள்:
துவக்கமாக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மன்ற தலைவர் சகோதரர் மஸ்ஊத் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் முன்னிலை வகித்தார். மன்றத்தின் உறுப்பினர் ஜே.எம்.முஹம்மத் ரயீஸ் அவர்களின் மகன் எம்.ஆர்.ஜமால் முஹம்மது கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
மன்ற செயலாளரின் வரவேற்புரை:
செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அழைப்பையேற்று பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் தனது வரவேற்புரையில் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். பின்னர், மன்றத்தின் அண்மைச் செயல்பாடுகள் பற்றி அவர் விளக்கமாக உரையாற்றினார்.
மேலும் கோழிக்கோட்டிலும், அதைச் சுற்றியுள்ள ஊர்களில் வசிக்கும் காயலர்களை நேரில் சந்தித்து, பொதுக்குழுக் கூட்டங்களில் பங்குபெறவும், மன்றத்தின் உறுப்பினராக இணையக் கோருவதென்றும் கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அதற்காக நியமிக்கப்பட்ட இரு குழுக்களும் சிறப்பான முறையில் செயல்பட்டதன் பலன் இந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே தெருகிறது என்றார்.
நம் கூட்டதிற்கு வரவிருக்கும் நமது சிறப்பு அழைப்பாளர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில், முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார் என்று கூறிய அவர் அவருடைய தந்தையும் - தனது நெருங்கிய நண்பருமான மர்ஹூம் ஜனாப் எஸ்.என்.காஜா சுலைமான் அவர்களை நினைத்து இரண்டு நிமிடம் கூட உரையாற்ற முடியாமல் ததும்பினார்.
மேலும் மருத்துவ உதவிகள் கோரி வரும் மனுக்களில், அடுக்கடுக்காக இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனை பில்லைதான் பார்க்க முடிகின்றது என்றும் கூறினார். புகைப்பழக்கத்தை கைவிடவும், அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நம் செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.கே.உதுமான் லிம்ரா அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர் , அவர்கள் அதை முழுவீச்சில் பொதுமக்களிடம் எடுத்து செல்லவுள்ளதாகவும், அனைவரும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டுமென்றும் கூட்டத்தைக் கேட்டுகொண்டார்.
நிகழ்ச்சியேடு வாசித்தல்:
செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் கடந்த மூன்று மாதத்தின் நிகழ்ச்சியேட்டை வாசிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
தேனீர் விருந்து:
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் அன்று மாலையில் குறித்த நேரத்தில் கூட்டம் நடைபெறுமிடத்தை வந்தடைந்தனர். அனைவருக்கும் தேநீருடன் பிரிட்டானிய பிஸ்கட்டும் விநியோகிக்கப்பட்டது. அதை கூட்டாக அமர்ந்து அண்மையில் ஊர் சென்று திரும்பியவர்களிடம் ஊர் நடப்புகளை விசாரித்தவண்ணம் தேனீர் அருந்தினர். அதே நேரத்தில் உறுப்பினர்களுக்கான இரவு உணவு ஏற்பாடுகள் மறுபுறம் விமரிசையாகவும், பரபரப்போடும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தலைமையுரை:
அக்கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மன்றத் தலைவர் ஜனாப் மஸ்ஊத் அவர்கள், இந்த கூட்டத்தை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! மேலும் இந்த கூட்டம் ஒற்றுமைக்கு ஓர் உன்னத எடுத்து காட்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
மேலும் மன்றத்தின் செயல்பாடுகள் வெற்றியடைவதற்கு எல்லா உறுப்பினர்களும் மன உறுதியுடனும் உழைக்கவேண்டும்... இம்மன்றம் ஊர் நலனிற்காக நல்ல பல திட்டங்கள் வைத்திருக்கிறது... நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நம் மன்றம் என்றும் முன்னோடியாக இருந்திருக்கிறது... இனியும் அந்நிலை தொடர - எல்லா நலத் திட்டங்களும் வெற்றியடைய அந்த வல்ல ரஹ்மான் உதவியுடன், உங்களின் மேலான ஒத்துழைப்பு என்றென்றும் அவசியமாகிறது... உங்கள் ஒத்துழைப்பு நிறைவாகக் கிடைத்தால், இன்ஷா அல்லாஹ் நாம் நமது சமூக சேவயை தொடர்ந்து செய்வோம்... அதன்படி அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் பயன்படுத்துவது பற்றிய விழிப்புண்ணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியமான ஒன்று என்று சொன்னார்.
நம் மன்றத்திற்கு வரும் மனுக்களில் புற்று நோய்க்காக உதவி கொரி வரும் மனுக்கள்தான் அதிகம் என்றார். எனவே இந்த விசயத்தில் நாம் ஒரு மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என கூறினார். மேலும் கேரளாவில் வசிக்கும் நடுத்தர மக்கள் அதிகமாக அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துவதை கூட்டத்திற்கு எடுத்து சொன்னார்.
மன்றத்தின் கோரிக்கையை ஏற்று புகை பழக்கத்தை அடியோடு நிறுத்திய மன்றத்தின் சில உறுப்பினர்களை வெகுவாக பாராட்டினார். இன்னும் சில உறுப்பினர்கள் இந்த பழக்கத்தை அடியோடு விடப்போவதாக அவரிடம் கூறியதாக கூட்டத்திற்கு எடுத்து சொன்னார்.
மேலும் நமது சிறப்பு அழைப்பாளர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். அவருக்கு தனது வாழ்த்துக்களையும் , பாராட்டையும் அவர் தனதுரையில் தெரிவித்தார். நாம் இனி வரும் சந்ததிகளை இவரைப் போன்று ஆற்றல்மிக்க ஹாஃபிழாக உருவாக்க பாடுபட வேண்டும் என்றார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர் மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் ஜனாப் உதுமான் அப்துர் ராஜிக் மன்றத்தின் கணக்குத் தணிக்கையாளரும், மன்ற உறுப்பினருமான நூருல் அமீன் ஒப்புதலுடன் தாக்கல் செய்தார். கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
நம் மன்றம் நல்ல வளர்ச்சி பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் நம் மன்றத்தின் வரவு-செலவுகளை கருத்திற்கொண்டு காரியங்களாற்றிடும் பொருட்டு வருங்கால செயல்திட்டங்களுக்கு நிதியுதவி மிகவும் முக்கியமானது என்பதையும் கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு எடுத்துக் கூறினார். எனவே உங்கள் நன்கொடைகளை நம் மன்றத்திற்கு வாரி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
கேள்வி நேரம்:
மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கென 25 நிமிடங்கள் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அந்நேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்றத் தலைவரும், அவரைத் தொடர்ந்து செயலாளரும் நிதானமாக பதில் அளித்தனர்.
பின்னர் மக்ரிப் ஜமாஅத்திற்காக முதல் அமர்வு இடைநிறுத்தம் செய்யபட்டு, கூட்டாக தொழுகை நிறைவேற்றப்பட்டது.
பின்னர், குழந்தைகளின் தாலாட்டுடன் இரண்டாம் அமர்வு துவங்கியது.
விசாரணை அறிக்கை:
பின்பு மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் அமீன் டூல்ஸ் எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத். அன்மையில் ஊர் சென்றபோது இரு மனுக்களை பற்றி விசாரிக்க பணிக்கபட்டிருந்தார். அவர் அங்கு விசாரித்த நடப்புகளை மன்றத்திற்கு விரிவாக எடுத்து சொன்னார்.
பாராட்டு நிகழ்ச்சி:
சிறப்பு அழைப்பாளர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில், முதலிடம் பெற்று சாதனை புரிந்தமைக்காக மன்றத்தின் சார்பில் ரொக்க பரிசாக ரூபாய் 21,000 தொகையும், நினைவுப் பரிசாக கேடயமும் வழங்கப்பட்டது.
சிறப்புரை:
அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் உரையாற்றினார்.
இறைவனின் நாட்டத்தினால்தான் எனக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்! மேலும் என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தார், என் உஸ்தாதுமார்கள், என் நண்பர்கள் அனைவர்களுக்கும் நன்றி கூறி மகிழ்ந்தார்.
மேலும் நான் மனனம் செய்த அருள்மறை திருக்குர்ஆன் என் மனதில் என்றும் நிலைத்திடவும் அதற்கான கூலி வல்ல இறைவனிடம் கிடைத்திடவும் நீங்கள் அனைவரும் எனது ஹக்கில் துவா செய்யுமாறு கேட்டுகொண்டார்.
மேலும் இந்த மலபார் கா.ந.மன்றத்தை பற்றி நிறைய கேள்விபட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு மென்மேலும் சிறப்பாக செயல்பட்டு நம் நகருக்காக நல்ல பல திட்டங்களை வகுத்திட வேண்டி இறைவனிடம் துவா செய்வதாகவும் கூறி அமர்ந்தார்.
வாழ்த்துரை:
பின்னர், பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் அப்துரஹ்மான் உரையாற்றினார். அவர் தனதுரையில் நான் இந்த அமைப்பில் நிர்பந்தமாகத்தான் உரிப்பினரானேன் என்றார். ஆனால் உள்ளே வந்த பின்புதான் எனக்கு தெருகிறது இது ஒரு உன்னதமான நோக்கத்திற்காக துவங்கப்பட்ட அமைப்பு என்றார்.
மேலும் இந்த அமைப்பை பொருத்த வரை தலைவராக இருக்கட்டும், செயலாளராக இருக்கட்டும், அனைத்து செயற்குழு உறுப்பினர்களாக இருக்கட்டும் அனைவர்களும் மிக சிறப்பாக செயலாற்றக் கூடியவர்கள் என்றார். எனவே நாம் அனைவரும் அவர்களுக்கு அணைத்து ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும் நாம் இன்று நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்ககூடியவர்களாக இருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ். மேலும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு இன்னும் அதிகமாக கொடுக்ககூடியவகளாக எங்கள் மனதை விசாலமாக்கி தருவாயாக என்று இறைவனை வேண்டினார்.
சிறப்பு அழைப்பாளர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மானை அவர் தனதுரையில் வெகுவாக பாராட்டினார். இன்று நம் இளவல்கள் சினிமா பாடல்களை முனுமுனுத்து கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த சகோதரர் ஹாஃபிழ் முஃபீஸுர்ரஹ்மான் தஜ்வீத் முறைப்படி திருக்குர்னை கற்று அதிலும் மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். மேலும் ஹாஃபிழ் முஃபீஸுர்ரஹ்மானை பார்த்து நீங்கள் ஒரு மங்காத பூவை மனதில் வைத்துள்ளீர்கள் என்றார். அதை நீங்கள் பிறருக்கு கற்றுகொடுத்து உங்களை போன்று பிற ஹாஃபிழ்களை உருவாக்க வேண்டும் என்றார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'யார் குர்ஆனை கற்று அதை பிறருக்கும் கற்று கொடுக்கிறார்களோ அவர்கள்தான் உங்களில் சிறந்தவர்' என்று கூறியதை நினைவு கூர்ந்தார்.
அவரை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் மீரான் வாழ்த்துரை வழங்கினார்கள். அவர் தனதுரையில் ஹாஃபிழ் முஃபீஸுர்ரஹ்மானையும் மன்றத்தையும் வாழ்த்தி அமர்ந்தார். பின்பு உறுப்பினர் ஜனாப் அஷ்ரப் அவருக்கே உண்டான நகைச்சுவை கலந்த பாணியில் ஹாஃபிழ் முஃபீஸுர்ரஹ்மானையும் மன்றத்தையும் வாழ்த்தி அமர்ந்தார்.
அதன் பின் மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் சாமு காக்கா ஹாஃபிழ் முஃபீஸுர்ரஹ்மானை வாழ்த்தியும் அவருக்கு உபதேசமாக சில வார்த்தைகளும் கூறினார்.
நன்றியுரை:
நிறைவாக, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் U.Lசெய்யது அஹ்மது நன்றி கூற, அனைவரின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
விருந்தோம்பல்:
கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இரவு எட்டு மணிக்கு கூட்டம் முடிவு பெற்ற பிறகு செயர்க்குழு உறுப்பினர் ஆப்தீன் பாய் தலைமையில் அனைவருக்கும் இடியாப்ப பிரியாணி துணையுடன் விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
மாலை 05.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 08.00 மணிக்கு அனைவரின் துஆவுடன் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு மலபார் காயல் நல மன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.E.செய்யது ஐதுரூஸ் (சீனா),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA),
கோழிக்கோடு, கேரள மாநிலம். |