காயல்பட்டினம் நெசவு ஜமாஅத்தைச் சார்ந்த தஸ்தகீர் என்பவரின் மகன் முஹம்மத் அலீ. இவருக்கு வயது எட்டு.
சில தினங்களுக்கு முன் அவருக்கேற்பட்ட ஒரு நிகழ்வில் அவரது தலையில் பாதிப்பு ஏற்பட்டு, தீவிர மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற அச்சிறுனின் குடும்பச் சூழலைக் கருத்திற்கொண்டு, நெசவு ஜமாஅத் சார்பில் பல்வேறு காயல் நல மன்றங்கள் மற்றும் அமைப்புகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் உதவித்தொகைகள் கிடைக்கப்பெற்று, சிகிச்சை துவங்கப்பட்டதாகத் தெரிகிறது.
எனினும், தேவைப்படும் தொகை இன்னும் அதிகம் என்ற நிலையில், நெசவு ஜமாஅத்தார் சார்பில் அச்சிறுவனின் மருத்துவ செலவிற்காக முதற்கட்டமாக ரூ.50 ஆயிரமும், இரண்டாம் கட்டமாக ரூ.60 ஆயிரமும் என் மொத்தம் ரூ.1,10,000 தொகை மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அச்சிறுவனின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் கண்டு வருவதாகவும, அவர் விரைந்து குணமடைய அனைவரும் பிரார்த்திக்குமாறும், சின்ன நெசவுத் தெரு மற்றும் பெரிய நெசவுத் தெருக்களைச் சார்ந்த நெசவு ஜமாஅத்தார் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
I.T.அப்பாஸ் ஸைஃபுத்தீன்,
பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம். |