குவைத் காயல் நல மன்றத்தால் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியின்போது, மருத்துவ உதவியாக இருபதாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
குவைத் காயல் நலமன்ற பொதுக்குழுக்கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி 02-02-2012 வியாழன் அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
வெளிப்புற நிகழ்ச்சியாக திட்டமிடப்பட்டிருந்த ஒன்று கூடல், திடீரென்று மாறிய கடுங்குளிர் வானிலையின் காரணமாக உட்புற நிகழ்ச்சியாக மாற்றப்பட்டு, Salmiyaவில் மன்றத் தலைவர் Sஎஸ்.எம்.ஹஸன் மௌலானா இல்லத்தில் நடைபெற்றது.
கத்தீப் மொகுதூம் முஹம்மது தலைமை தாங்கினார். மாணவர் எம்.ஏ.கே.ஷேக் நூர்தீன் கிராஅத் ஓதினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
(1) எமது மன்ற துணைச்செயளாளர் S.M.T. மொகுதூம் முஹம்மது அவர்களின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அன்னாரின் மறுமை வாழ்க்கை வெற்றி பெற துஆ செய்யப்பட்டது.
(2) மூன் டிவி நடத்திய மாநில அளவிலான குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மானுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
(3) புதிதாக துவக்கப்பட்டுள்ள முதலிடத்தைப் பெற்ற காயல்பட்டினம்-சென்னை வழிக்காட்டு மையம் (KCGC) மற்றும் அபுதாபி காயல் நல மன்றத்திற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
(4) சமீபத்தில் மருத்துவ உதவிகேட்டு வந்திருந்த இரண்டு விண்ணப்பங்களுக்கு தலா Rs 10,000/- வீதம் Rs. 20,000/- உதவி வழங்கியது பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படடது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊர் நடப்புகள், பொதுவான விஷயங்கள் மற்றும் நல்ல பல ஆலோசனைகள், கருத்துக்களை உறுப்பினர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.
பொதுக்குழு ஒருபுறம் நடக்க, குடும்ப சங்கமத்தின் நிகழ்ச்சியாக மற்றொரு அறையில் பெண்கள் தங்களுக்கிடையில் கலந்துரையாடி மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர். இது போக, பெரியவர்களுக்கு மட்டும்தான் பொதுக்குழுவா, எங்களுக்கு இல்லையா என்கிற ரீதியில், மற்றொரு அறையில், குட்டீஸ், அவர்களுடைய பொதுக்குழுவை அவர்களுக்கே உரித்தான ஸ்டைலில் தூள் பரத்தினார்கள்.
இறுதியாக, இரவு உணவுக்குப்பின், துஆவுடன் கூட்டம் இனிதே முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ். கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, குவைத் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.M.அபூதாஹிர்,
பொருளாளர், காயல் நல மன்றம், குவைத். |