காயல்பட்டினத்தில், அண்மையில் பெய்த பருவமழையைத் தொடர்ந்து குளிர்ந்த வானிலை நிலவியது. இதுகாலம் நீடித்த இவ்வானிலை கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றம் கண்டுள்ளது. நகரில் கடும் வெப்பத்துடன் வெயில் வீசுகிறது. காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளது.
நகர வானிலை குறித்த செய்திகளை, www.kayalsky.com என்ற வலைதளத்தில் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.
3. Re:துவங்கியது வெப்ப வானிலை!... posted byVilack SMA (Hong Shen , Siacun)[10 February 2012] IP: 218.*.*.* China | Comment Reference Number: 16697
Nizar பாய் , " வருக , தருக , வியாபாரம் பெருகுக , பொறுத்துக்கொள்க " எல்லாம் ok தான் . ஆனால் " இளைப்பாறுக " ஏகப்பட்ட இடர்பாடுகள் .
ஒரு மாலைப்பொழுதில் அங்கு இளைப்பாற சென்றேன் . ஒரு பக்கம் கால்பந்து . என்ன தம்பி என்றேன் . சற்று பொறுத்துக்கொள்க என்கிறான் . இன்னொரு பக்கம் வாடா , கஞ்சி , என்னப்பா என்றதும் " வாங்கிக்கொள்க " என்கிறார்கள் . எங்கு நோக்கினும் குப்பை கூளங்கள் . நகர்மன்றத்தை திட்டி தீர்க்கலாம் என்று எண்ணிய நேரத்தில் , நண்பர் ஒருவர் , இந்த environmental ஐ பழகிக்கொள்க என்கிறார் . காலாற நடக்கலாம் என்று கிளம்பினால் , தெரியாமல் " அதை " மிதித்து விட்டேன் .எவனோ ஒருவன் அவசரத்தில் " உட்கார்ந்து " சென்றிருக்கிறான் போலும். குசலம் விசாரித்த பெரியவர் ஒருவர் மூக்கை பிடித்துக்கொண்டு , கடலில் அலசிக்கொள்க என்றார் . ( அவசரத்திற்கு போக விரும்பினால் அங்கே அந்த வசதிகள் இல்லையாம் , நண்பர் சொன்னது . உனக்கும் " அவசரம்னா திரும்பி விடலாம் என்றார் )
அப்புறம் , சுல்தான் சார் , 8 மணி நேர மின் தடையை update செய்யவில்லை என்று ஆதங்கப்பட்டீர்கள் . Admin .salih காக்கா வீட்டுல மிகப்பெரிய inverter இருக்குதாம் . அதுனால power cut ஆனாலும் அவங்க வீட்டுல எப்பவும்போல மின்சாரம் தடைபடாமல் இருக்கும் . 8 மணி சமாச்சாரம் அவருக்கு தெரிய வந்திருக்காது . தெரிந்தால் உங்களுக்கு உடனே update பண்ணி தருவார் . சற்று பொறுத்துக்கொள்க.
மேலே கூறப்பட்ட அனைத்தும் " கொள் " க சமாச்சாரங்கள் . " கொல் " லும் சாமாச்சாரங்களும் நிறைய உண்டு நமதூரில் . உதாரணத்திற்கு , வீடு கட்டுகிறேன் என்று சொல்லி தெருவில் கற்களை குவித்து வைத்து , ஆட்களை இடறி விழச்செய்து " கொல் " வார்கள் . வானுயர speed breaker அவரவர் வசதிபோல கட்டிவைத்து , வாகன ஓட்டிகளை " கொல் " வார்கள் . மீன்கடையிலும் , கோழி கடையிலும் வசதி உள்ளவன் முண்டியடித்து , போட்டி போட்டு வாங்கி , இவர்களாகவே விலையேற்றம் செய்து , ஏழை எளிய மக்களை அங்கே அண்ட விடாமல் " கொல் " வார்கள் .
ஆக " கொள் " க , " கொல் " க , எல்லாமே நம்மிடம்தான் உள்ளது . சற்று பொறுத்துக்கொள்க.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross