காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளையால் நடத்தப்படும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் உதவும் மையம் 06.02.2012 அன்று துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
இந்தியாவில் (10) பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் இளம் பிராயத்தினரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் வருடம் தோறும் சுமார் 25,000 குழந்தைகள் இந்த நோய் பாதிப்பினால் இறந்து போவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பிற ஊர்களிலும் இது போன்று நீரிழிவு நோயினால்; பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் இருப்பது இத்துறை சார்ந்த மருத்துவர்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் காயல்பட்டினம் நகரைச் சேர்ந்த தஸ்லீமா என்ற (3) மூன்று வயது சிறுமி நீரிழிவு நோயினால்; பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பெற்றோர் துளிர் அறக்கட்டளையை அணுகி மருத்துவ உதவி கேட்டு நாடினார்கள். அதன் அடிப்படையில் துளிர் அறக்கட்டளையின் சார்பு பிரிவாக பிரத்தியேகமாக நீரிழிவு குழந்தைகளுக்கு உதவும் மையம், 06.02.2012 அன்று துவங்கப்பட்டுள்ளது.
மேலும் இக்குழந்தைக்குத் தேவையான இன்சுலின், க்ளுகோமீட்டர், ரத்தப் பரிசோதனை ஸ்டிரிப்கள், பேனா வகை சிரிஞ்சுகள் ஆகிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இக்குழந்தைக்;கும் இதுபோன்று நீரிழிவு நோயினால்; பாதிக்கப்பட்டுள்ள ஏழ்மை நிலையில் உள்ள பிற குழந்தைகளுக்கும் அவர்கள் வாழ்நாழ் முழுவதும் மருத்துவ உதவி தேவைப்படுவதால் துளிர் அறக்கட்டளை மேற்கண்ட மருத்துவ உதவிகளை வழங்கிட முடிவு செய்துள்ளது.
இதற்காக தன்வந்தர்களை அணுகி உதவிகள் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக நீரிழிவு நோயினால்; பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தஸ்லீமாவுக்கு மாதம் ரூ.5,000 வழங்கி சிறுமியின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்ய உதவிகள் கேட்டு நிற்கின்றது.
இதற்கான பொருளுதவி வழங்க விரும்புவோர் துளிர் அறக்கட்டளையை நாடலாம் என்று அதன் செயலாளர், எம்.எல்.ஷேக்னா லெப்பை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் துளிர் அறக்கட்டளையின் நிறுவனர் வழக்குறைஞர் அஹமது அப்துல் காதர், துளிர் பெற்றோர் மன்றத் தலைவி வி.எஸ்.ஏ,ஆயிஷா சாகிபு தம்பி ஆகியோர் சிறுமி தஸ்லீமாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கினார்கள்.
இவ்வாறு, துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.L.ஷேக்னா லெப்பை,
செயலாளர்,
துளிர் அறக்கட்டளை, காயல்பட்டினம். |