கடந்த 10 ஆண்டுகளில் - தமிழகத்தில் இரண்டு முறை மின்சாரக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு உயர்தப்பட்டப்பின், மின்
கட்டணம் - சிறு அளவில் 2010 ஆம் ஆண்டு மீண்டும் உயர்த்தப்பட்டது.
நிதி ஆதாரம் மோசமான நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு, கடந்த நவம்பர் மாதம், மீண்டும் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம்
பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து டிசம்பர் வரை மக்கள் கருத்து எழுத்துவடிவில் பெறப்பட்டது. சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய
நகரங்களில் மக்கள் கருத்து கேட்கும் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவை நேற்றுடன் - மதுரையில் நடந்த நிகழ்ச்சியுடன் -
முடிவடைந்துள்ளது. இக்கூட்டங்களில் - கட்டண உயர்வுக்கு - பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது அமலில் இருக்கும் மின்சார கட்டணம்....
புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மின்சார கட்டண விபரம்....
புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டணங்கள்படி 200 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு - மின்கட்டணம், 74 சதவீதம் உயர்கிறது. 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு - மின்கட்டணம், 94 சதவீதம் உயர்கிறது. 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, 113 சதவீதம் வரை கட்டணம் உயர்கிறது.
மாநிலத்தில் உள்ள சுமார் 1.40 கோடி இல்லங்களுக்கான இணைப்புகளில் - 79 லட்சம் இணைப்புகள், 100 யூனிட்டுக்கும் குறைவாகவே மின்சாரத்தினை பயன்படுத்துகின்றன. 30 லட்சம் இணைப்புகள், 101 - 200 யூனிட்கள் வரை பயன்படுத்துகின்றன.
புதிய கட்டண பரிந்துரையில் - உள்ளாட்சி மன்றங்களுக்கான கட்டணம் - உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது யூனிட்டுக்கு 3.30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதனை 5.50 ரூபாய் என உயர்த்த - தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வழிப்பாட்டு தலங்களுக்கான கட்டணம் - 120 யூனிட்வரை, ரூபாய் 2.50 என்றும், அதற்கு மேல் ரூபாய் 5.00 என்றும் உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டணங்கள் - சில மாற்றங்களுடன் - வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் - மின்சார
வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு பெரும் அளவு கட்டுப்படுத்தப்படும் என்றும், புதிய திட்டங்களுக்கு பொருளாதாரத்தினை திரட்டுவது எளிதாகும் என்றும்
- வாரியத் தரப்பில் கூறப்படுகிறது.
[தொடரும்] |