செய்தி எண் (ID #) 8010 | | |
செவ்வாய், பிப்ரவரி 14, 2012 |
ஜாவியா மேலாளர் ஹாஜி என்.கே.மிஸ்கீன் ஸாஹிப் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 7162 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (36) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிறுவனத்தின் மேலாளர் – ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த ஹாஜி என்.கே.மிஸ்கீன் ஸாஹிப், இன்று அதிகாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 87.
ஜாவியாவின் முன்னாள் மேலாளர் மர்ஹூம் முஹம்மத் நூஹ் ஆலிம் ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ அவர்களின் மகனான இவர் என்.கே.இப்றாஹீம் ஹாஜியாரின் மூத்த சகோதரரும், கே.எம்.டி. மருத்துவமனை முன்னாள் தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, நகர அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.முத்துவாப்பா ஃபாஸீ ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரருமாவார்.
இவரது மனைவி கடந்த 1993இல் காலமானார். இவருக்கு ஹாஃபிழ் எம்.எஸ்.ஸஈத், ஹாஜி எம்.எஸ்.முஹம்மத் நூஹ், ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் செயலாளர்), ஹாஜி எம்.எஸ்.அபுல்ஹஸன், ஹாஃபிழ் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஹாஜி எம்.எஸ்.ஜாபிர் ஆகிய 6 ஆண் மக்களும், 3 பெண் மக்களும் உள்ளனர்.
ஹாஜி ஏ.ஜமீல், மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எச்.முஹம்மத் கல்ஜீ ஃபாஸீ ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ, மவ்லவீ அப்துல் வதூத் ஃபாஸீ ஆகியோர் இவரது மகள்களைத் திருமணம் செய்துள்ள மருமக்களாவர்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
புகைப்பட உதவி:
எஸ்.ஆர்.பீ.ஜஹாங்கிர் |