பொது நல ஆர்வலரும், காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் முஹம்மத் இப்ராஹீம், 14.02.2012 அன்று (நேற்று) மாலை 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 66.
அன்னாரின் ஜனாஸா, காயல்பட்டினம் மருத்துவர் தெருவிலுள்ள அவரது இல்லத்திலிருந்து, இன்று காலை 10.30 மணியளவில் காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, ஹாஜி அஷ்ஷெய்க் எம்.இசட்.ஜலீல் முஹ்யித்தீன் காதிரீ ஜனாஸா தொழுகையை வழிநடத்தினார். பின்னர் ஜனாஸா அப்பள்ளி மையவாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, காலை 11.15 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வுகளில், புதுப்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், அதன் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, தாயிம்பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி கே.எம்.தவ்லத், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், அதன் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் செயலாளர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் நிர்வாகிகளுள் ஒருவரான மஹ்மூத் நெய்னா, மகுதூம் பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி ஏ.ஆர்.இக்பால்,
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை முதல்வர் மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, அதன் ஆசிரியர்களான ஹாஃபிழ் நஈம் உதுமான், அப்துல் அஜீஸ், ஃகலீஃபா ஸதக்கத்துல்லாஹ், இசட்.ஏ.முஹம்மத் அப்துல் காதிர்,
மார்க்க அறிஞர்களான எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம், மவ்லவீ அப்துல் வதூத் ஃபாஸீ, ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், அதன் செய்தித் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், காயல்பட்டினம் நல அறக்கட்டளை செயலாளர் ஆதம் சுல்தான், அதன் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, ‘மெகா‘ ஒருங்கிணைப்பாளர் கவிமகன் காதர், துளிர் அறக்கட்டளை செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசகர் ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.அஹ்மத், காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் - சென்னை அமைப்பின் செயலாளர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத்,
எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் காஜா முகைதீன், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீஃபன்,
அரசு நூலக நூலகர் முஜீப், காயல்பட்டினம் தொலைபேசி நிலைய துணைப் பொறியாளர் ஜெயக்கொடி, துணை உதவிப் பொறியாளர் நம்பிராஜன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.எச்.அப்துல் வாஹித், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மாவட்ட பிரதிநிதி ஹாஜி எஸ்.டி.கமால், தேசிய முற்போக்கு திராவிடர் கழக மாவட்ட பொருளாளர் தம்மாம் அஹ்மத் ஹுஸைன், அதன் நகர செயலாளர் கேப்டன் ஸதக்கத்துல்லாஹ், துணைச் செயலாளர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஸதக்கத்துல்லாஹ்,
நகரப் பிரமுகர்களான ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், நெசவு ஜமாஅத்தைச் சார்ந்த ஜின்னா, எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா, காயல் மவ்லானா, இரத்தினபுரி பன்னீர் செல்வம், அருணாச்சலபுரம் பன்னீர் செல்வம், கடையக்குடி தேவாலயத்தின் பங்குத்தந்தை, ஓய்வுபெற்ற ஆசிரியர் குமரகுரு, சமூக சேவகர் ஆர்.எஸ்.கோபால் மற்றும், காயல்பட்டினம் நகர்மன்ற அதிகாரிகள், அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
நல்லடக்கத்தின்போது, காயல்பட்டினம் புதுப்பள்ளிவாசல், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை, துளிர் அறக்கட்டளை, அனைத்து சமுதாய நல அமைப்பு, அரசு நூலகம் ஆகியவற்றின் சார்பில் இரங்கல் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. தனிநபர்கள் சார்பில் காயல்பட்டினத்தின் முக்கிய பகுதிகளில் இரங்கல் தெரிவித்து தட்டிப்பலகையும் நிறுவப்பட்டிருந்தது.
|