காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிறுவனத்தின் மேலாளர் – ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த ஹாஜி என்.கே.மிஸ்கீன் ஸாஹிப், 14.02.2012 அன்று (நேற்று) அதிகாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 87.
அன்னாரின் ஜனாஸா, நேற்று மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் மகுதூம் பள்ளிக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு, அவரது பேரன் ஹாஃபிழ் எம்.எஸ்.ஃபைஸல் மிஸ்கீன் ஜனாஸா தொழுகையை வழிநடத்தினார்.
பின்னர், ஜனாஸா மையவாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வுகளில் நகர ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளும், அங்கத்தினரும், அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் A.W.அப்துல் காதிர் புகாரீ. |