காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் இஸ்லாமிய அழைப்புப் பணிகளைச் செய்வதற்கு சொந்தமாக வாகனம் வாங்க, இன்னும் ரூபாய் பத்தாயிரம் மதிப்பில் இன்னும் 30 பங்குகள் தேவைப்படுவதாக அந்நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தஃவா சென்டர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிலையான தர்மத்திற்க்கு இன்னும் நீங்கள் தயாராக வில்லையா?
அன்பின் சகோதர,சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
நமது தஃவா சென்டர் பணிகள் பற்றி தாங்கள் அறிந்ததே. தாமாக முன்வந்து இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியல் நெறியாக்க்கி கொண்ட மக்களுக்கு 100 நாட்கள் அடிப்படைக் கல்வி, முஸ்லிமல்லாதோருக்கு இஸ்லாமை அதன் தூய வடிவில் சிறு சிறு கிராமங்களில் எடுத்துரைக்கும் பணியையும் செய்து வருவது தாங்கள் அறிந்ததே.
முதலில் நாம் கிராமங்களுக்கு தஃவா செய்திட வாடகை வேன் மூலமாக சென்று வந்தோம். பின் நமது சகோதரர்களின் மூலம் வேன் சொந்தமாக கிடைக்கப் பெற்று அதன் மூலம் 3 நாள் ஆண்கள் தஃவாவும், 1 நாள் பெண்கள் தஃவா செய்து வந்தோம் அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நமது வேன் பழுதானதன் காரணமாக இரண்டு மாதங்களாக 1 நாள் பெண்கள் தஃவா செய்ய முடியவில்லை. மேலும் டிசம்பர் மாத 3 நாள் ஆண்களுக்கான தஃவாவை செய்தாக வேண்டும் என்ற தீர்மானத்துடன் பேருந்து, ரயில், வாடகை கார் ஆகிய வாகனங்களில் சென்று தஃவா செய்தது எல்லாம் தாங்கள் அறிந்ததே.
இதனைக் கருத்தில் கொண்டு நாம் புதிய வேன் வாங்கிட இணையதளத்தின் மூலம் வெளியிட்டிருந்த செய்தியான ரூ10,000 வீதம் 100 நபர்களான மறுமைக்கான ஷேர் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, ஏற்கனவே, 42 பங்குகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று வரை 70 மறுமைக்கான ஷேர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 30 நன்மையான ஷேர்கள் உங்களில் யாரை வந்தடைய போகிறதோ?
இந்த நிலையான தர்மத்திற்க்கு தாங்களும் உதவி செய்து மற்றவர்களையும் உதவி செய்யத் தூண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் நாம் இந்த மாதம் செல்ல இருக்கும் தஃவாவிற்க்கு பஸ் பயணத்தின் மூலம் தஃவா செய்ய முடிசெய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் வருகிற மாதத்திலாவது நமது செந்த வாகனத்தில் சென்று தஃவா செய்திட உதவிடக் கேட்டுக் கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் யாவருடைய பாவங்களைவும் மன்னிப்பானாக!
மேலதிக விபரங்களுக்கு, +91 98421 77609, +91 91500 50557 ஆகிய எண்களிலொன்றைத் தொடர்புகொண்டு கேட்டறிய கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |