காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, கே.எம்.டி. மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள், தூத்துக்குடி திரவியம் எலுமபு முறிவு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் எலும்பு மூட்டு நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை இலவச முகாம் 19.02.2012 அன்று (நாளை) காலை முதல் மதியம் வரை, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.
இம்முகாமில் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவோருக்கு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஏற்பாட்டில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய உதவப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு முறைகள் குறித்த அசைபடத்துடன் கூடிய விளக்கமும், முகாமில் கலந்துகொள்வோருக்கு அளிக்கப்படவுள்ளது.
முன்பதிவிற்கு, ஜெய்னுல் ஆப்தீன் (98423 65912), ஷேக் முஹம்மத் (95438 13045) ஆகியோரைத் தொடர்புகொள்ளுமாறு முகாம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். |