கல்வி, மருத்துவம், ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்பட சிறுதொழில் ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளித்து மன்றத்தின் செயல்திட்டங்கள் அமைக்கப்படுமென ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அமீரக தலைநகர் அபூதபீயில் சென்ற மாதம் துவக்கப்பட்ட காயல் நல மன்றத்தின் முதல் செயற்குழுக் கூட்டம் 17.02.2012 அன்று மாலையில், மன்றத்தின் கவுரவத் தலைவர் ஜனாப் இம்தியாஸ் அஹ்மத் தலைமையில், முஸஃப்ஃபாவிலுள்ள - மன்றப் பொருளாளர் எம்.ஓ.அன்சாரி இல்லத்தில் கூடியது. ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீதின் இறைமறை கிராஅத்துடன் கூட்டம் துவங்கியது.
நகர்நலன் குறித்த உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மாதாந்திர செயற்குழுக் கூட்டங்கள்:
மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டங்கள் பிரதி மாதம் முதல் வாரத்தின் வெள்ளிகிழமை அஸர் தொழுகைக்கு பின் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. அபூதபீயில் காயல் மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 126 என்று உறுதி செய்யப்பட்டது.
தீர்மானம் 2 - சந்தா வசூலிப்பு:
மன்ற உறுப்பினர்களிடமிருந்து சந்தா தொகையை வசூலிப்பதற்கு லெப்பை தம்பி, நூருல் ஹக் மற்றும் தோஷிபா இம்தியாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தீர்மானம் 3 - வருங்காலப் பணிகள்:
மன்றத்தின் வருங்காலப் பணிகளில் கல்வி, மருத்துவம், ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்பட சிறுதொழில், வேலைவாய்ப்பு ஆகிய துறைகள் முக்கியத்துவம் பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் நமதூர் மாணவ மாணவியரின் முன்னேற்றத்தினைக் கருத்திற்கொண்டு, பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் [SPOKEN ENGLISH] ஆகியவற்றுக்கு தகுந்த திட்டங்கள் வகுக்கப்படும்.
நமதூரின் பாரம்பரியத்திற்கும், மக்களின் ஒற்றுமையான வாழ்க்கைக்கும் தேவையான கவுன்சலிங் மூலம் செம்மையாக முயற்சிகள் மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - ஹாஃபிழ் மாணவ மாணவியரை ஊக்குவித்தல்:
திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ளு) நிறைவுசெய்து, பின்னர் பள்ளிக்கூட கல்வியைத் தொடரும் மாணவ-மாணவியரை ஊக்குவிக்கும் முகமாக, அவர்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவியருக்கு இக்ராஃ அமைப்பு மூலம் ஆண்டுதோறும் மன்றத்தின் சார்பில் ரூபாய் பத்தாயிரம் பணப்பரிசளிக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - கே.எம்.டி.யின் டெண்டல் எக்ஸ்ரே கருவியின் அவசியம்:
கே.எம்.டி. மருத்துவமனைக்கு டெண்டல் எக்ஸ்ரே கருவியின் அவசியத்தை தெரிந்துகொண்ட மன்றம், அதன் முழு தகவல்கள் கிடைத்த பிறகு முடிவெடுக்க தீர்மானிக்கபட்டது.
தீர்மானம் 6 - மல்டிமீடியா லைப்ரரி அமைத்தல்:
மன்றத்தின் சார்பில் வருங்காலத்தில் நமதூரில் மல்ட்டிமீடியா லைப்ரரி ஒன்று அமைப்பபதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 7 - வாழ்த்துக்கு நன்றி:
அபூதபீ காயல் நல மன்ற துவக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த சகோதர மன்றங்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.
தீர்மானம் 8 - அவசர மேலாண்மைக் குழு அமைப்பு:
மன்றத்தின் அவசர கால நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாக செய்திட, 9 பேர் கொண்ட அவசர மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது.
தீர்மானம் 9 - மறைந்தோருக்கு இரங்கல்:
ஜாவியா மேலாளரான ஹாஜி என்.கே.மிஸ்கீன் ஸாஹிப் அவர்களின் மறைவுக்கும்,
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவியின் தந்தையுமான ஜனாப் பாளையம் இப்ராஹீம் அவர்களின் மறைவுக்கும்,
நமது மன்ற உறுபினர் ஜனாப் M.A.S. ஐயூப் அவர்களின் தந்தையார் ஹாஜி M.A. சம்சுதீன் அவர்களின் மறைவுக்கும் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும், அன்னவர்களின் பாவப்பிழை பொறுப்பிற்காக (மஃபிரத்திற்காக) துஆ செய்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடுத்த செயற்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06ஆம் தேதியன்று அஸர் தொழுகைக்குப் பின் நடைபெறும் என மன்றத்தின் செயல் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ அறிவித்தார். இறுதியாக துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
செய்தி தொடர்பாளர்.
படங்கள்:
N.M.சுப்ஹான் பீர் முஹம்மத்,
காயல் நல மன்றம்,
அபூதபீ, ஐக்கிய அரபு அமீரகம். |