திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் எதிர்வரும் மார்ச் 18 ம் தேதி அன்று இடைத்தேர்தல்
நடைபெறவுள்ளது. இது குறித்த அறிவிப்பு பிப்ரவரி 16 அன்று வெளியானது. இத்தொகுதியின் சில பகுதிகள் தூத்துக்குடி மாவட்டத்திலும்
அமைந்துள்ளதால் - திருநெல்வேலி மாவட்டம் தவிர, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் - தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்திடுமாறு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பின் விளைவாக - காயல்பட்டினம் நகரமன்றத்தின் - மாதாந்திர உறுப்பினர் கூட்டம், மக்கள் குறைதீர் கூட்டம் ஆகியவையும் -
சங்கரன்கோவில் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை, அதிகாரிகள் உத்தரவுப்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் - நகர்மன்றத் தலைவர் நடத்தும் மாதாந்திர அனைத்து ஜமாஅத்துக்கள் - பொது நல அமைப்புகள்
கலந்துரையாடல் கூட்டமும், அதிகாரிகள், உள்ளாட்சி தலைவர்கள் போன்றோர் எந்த பொது கூட்டங்கள்/நிகழ்சிகளில் கலந்துக்கொள்ளக்கூடாது
என்ற விதிமுறையினால், இம்மாதம் நடைபெறாது என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. |