Confederation of
Real Estate Developers’ Associations of India (CREDAI) - இந்தியாவில் தனியார் துறையில் இயங்கும் ரியல் எஸ்டேட்
நிறுவனங்களில் கூட்டமைப்பாகும். 6000 உறுப்பினர் நிறுவனங்களுக்கு மேல் உள்ள இவ்வமைப்புக்கு இந்தியா முழுவதும் 18 கிளைகள் உள்ளது.
CREDAI அமைப்பின் சென்னை பிரிவின் ஏற்பாட்டில் Fairpro 2012 என்ற கண்காட்சி
இம்மாதம் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது.
சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள Chennai Trade Centre வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் 65 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் -
தங்களின் 250 க்கும் மேலான திட்டங்களை பார்வைக்கு வைத்திருந்தனர். 15 லட்சம் ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை மதிப்பிலான
சொத்துக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களும்
சுயமாக நடத்தை
வழிமுறையில் (Code of Conduct) கையெழுத்திட்டிருந்தனர். அதன்படி - விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து திட்டங்களும் - அரசின்
முறையான ஒப்புதல்களும் பெறப்பட்டு, அனைத்து வழிமுறைகளும் பின்பற்றியவை என கண்காட்சி ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
இக்கண்காட்சியில் காயல்பட்டணம் பூர்விக Wavoo Realty and Investments நிறுவனம் மற்றும் Ramky குழுமம் ஆகியவற்றின் 50:50 கூட்டு
நிறுவனமான RWD, ETA Star, Jamals போன்ற நிறுவனங்களும் பங்கேற்றன. சென்னையில் வாழும் காயலர்கள் பலர்
இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த திட்டங்களை காண வந்திருந்தனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross