காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையை நடத்தும் காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:-
தலைவர்:
டாக்டர் ஹாஜி எம்.எஸ்.அஷ்ரஃப்
துணைத் தலைவர்கள்:
ஹாஜி ஏ.கே.அப்துல்லாஹ்
ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ்
செயலாளர்:
ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம்
துணைச் செயலாளர்கள்:
ஹாஜி ஏ.கே.செய்யித் அப்துல் காதிர்
ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி
பொருளாளர்:
ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார்
துணைப் பொருளாளர்:
ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை)
26.12.2011 திங்கட்கிழமையன்று மாலை 05.30 மணியளவில், கே.எம்.டி. மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், மேற்கண்டவாறு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1. Re:கே.எம்.டி. மருத்துவமனைக்க... posted byMauroof, S/o. Mackie Noohuthambi (Dubai)[23 February 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17134
தமிழகத்தின் தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவராகத் திகழும் சகோ. டாக்டர் ஹாஜி எம்.எஸ்.அஷ்ரஃப், M.S.,
அவர்களை தலைவராகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தன்னலம் கருதாது இதுநாள் வரையிலும் பணியாற்றிய முன்னாள் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றிகள். புதிய நிர்வாகம் தூத்துக்குடி மாவட்டத்திலேயே பெரிய பரப்பளவில் பசுமை ததும்பும் சூழலோடு அமையப்பெற்ற இந்த KMT மருத்துவமனை மாநிலத்தின்/நாட்டின் புகழ் பெற்ற மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழவும், சிறந்த மருத்துவ சேவை ஒன்றையே முக்கிய குறிக்கோளாக கொண்டு இதுநாள் வரை செயல்பட்டது போன்று இன்னும் மேம்பாட்டோடு செயல்படவும், ஏழை எளியோர்கள் தேவையான மருத்துவம் பெற்றிடும் வகையிலும் செயல்பட வழிவகுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் மக்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன் இன்னும் சிறப்பாக செயல்பட்டு சிறந்த மருத்துவமனையாக இந்த KMT மருத்துவமனையை திகழச் செய்யவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் எல்லோருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்தருள்வானாக. நல்ல ஆரோக்கியத்தோடு வாழ தேவையான முயற்சிகளை மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசு இயந்திரங்களுக்கும் (அதிகாரிகளுக்கும்) நல்லறிவை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
3. Re:கே.எம்.டி. மருத்துவமனைக்க... posted byShameemul Islam SKSs (Chennai)[23 February 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 17140
புதிய தலைவருக்கும் மற்ற பொறுப்பாளர்களுக்கும் அகம் கனிந்த வாழ்த்துக்கள்.
இதுவரை மிகச்சிறப்பாகப் பணியாற்றி புதிய பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டி வழி விட்டிருக்கும் முன்னாள் பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நீண்ட நாட்களுக்குப் பின் பொறுப்புகளுக்கு புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இம்மருத்துவமனையைக் கொண்டு ஊர் மக்களிடமிருந்து இன்னும் அதிக பயன்பாட்டை எதிர்பார்த்தே ஒரு புதுத் தெம்பை ஊட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக நினைக்கத் தோன்றுகிறது.
அதுவும் மருத்துவரால்தான் மருத்துவமனைப் பொறுப்பை மிகச் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்னும் நிலையை தலைவராக ஒரு மருத்துவரையே தேர்ந்தேடுத்திருப்பதன் மூலம் அறிய முடிகிறது. மற்ற தனியார் மருத்துவமனைகள் வெற்றிக்குக் காரணமும் இதுதான்.
வல்ல ரஹ்மான் பொறுப்பை புதிதாக சுமந்திருக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் அபிவிருத்தியையும் தந்து ஊரின் அனைத்துப்பகுதி மக்களும் இதன் சேவைகளைப் பயன்படுத்திட உதவி செவானாக, ஆமீன்.
4. Re:கே.எம்.டி. மருத்துவமனைக்க... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[23 February 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 17141
புதிய நிர்வாகிகள் KMT சேவையை மேம்படுத்தும் பொருட்டு "Complain & Suggestion" புக்கை பொதுமக்கள் பார்வையில் வைத்தால், நிறை குறைகளை தெரிந்து சேவையை மேம்படுத்த ஏதுவாக இருக்கும்.
7. Re:கே.எம்.டி. மருத்துவமனைக்க... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[23 February 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17144
கே.எம். டி மருத்துவ மனையின் புதிய நிர்வாகிகளுக்கும், திறம் பட நிர்வாகித்த பழைய நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புதிய நிர்வார்கிகளின் நிர்வாகத்தில் இன்னும் திறம்பட செயல்பட்டு ஆரம்பித்ததின் நோக்கத்தை முழுமையாக அடையும் என எதிர்பார்ப்போம். இதற்கு பொதுமக்களாகிய நாமும் தோள் கொடுப்போம்.
காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையின் புதிய தலைவருக்கும் மற்ற பொறுப்பாளர்களுக்கும் எனது மனம் நிறைவான வாழ்த்துக்கள்.
தேர்ந்து எடுக்க பெற்ற புதிய நிர்வாகிகள் இந்த மருத்துவமனையின் சேவைகள் நமது ஊரு மக்களுக்கு இன்னும் நல்ல முறையில் பயன் பெரும் வகையில் எந்த குறைபாடுகளும் வராமல் பார்த்து கொள்வதுடன், நமது ஊரு மக்கள் வேறு பிற மருத்துவமனைகலை நாடாத வகையில் எல்லா வசதிகளையும் இங்கே அமைத்து கொடுக்க நல்ல முயற்சிகளை எடுத்தால் நமது மக்கள் அதன் மூலம் நல்ல பலன்களை அடைய முடியும்.
வல்ல நாயன் உங்களின் நல்ல முயற்சிகலீல் வெற்றியினை தருவானாக .ஆமீன்
9. Re:கே.எம்.டி. மருத்துவமனைக்க... posted byV D SADAK THAMBY (KAYALPATNAM)[24 February 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 17147
நம் ஊர் மக்கள் அனைத்து தரப்பினரும் KMT HOSPITAL ஐ ஆதரித்தாலே போதுமானது . இன்னும் சிறப்பாக அதன் சேவையை ஊர் மக்களுக்கு வழங்க முடியும்.
KMT HOSPITAL நிர்வாகம் வெளிப்படையானது. "Complain & Suggestion" எதுவும் இருந்தால் அங்குள்ள அலுவலகத்திலேயே தெரிவிக்கலாம். குறைகளை களைய முனைவார்கள் நிச்சயமாக.
10. Re:கே.எம்.டி. மருத்துவமனைக்க... posted byHasan (Khobar)[24 February 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17149
மருத்துவர் அஸ்ரப் மற்றும் அவரை சார்ந்த நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். ஒரு தலை சிறந்த மருத்துவர் நம் கே.எம்.டி மருத்துவமனையை நல்ல முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம்
11. Re:கே.எம்.டி. மருத்துவமனைக்க... posted byAhamed 48 (Chennai)[24 February 2012] IP: 121.*.*.* India | Comment Reference Number: 17150
அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்).. கே.எம். டி மருத்துவ மனையின் புதிய நிர்வாகிகளுக்கும், திறம் பட நிர்வாகித்த பழைய நிர்வாகிகளுக்கும், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
குறிப்பிட்ட சில மருத்துவர்களால், சில நோய்களுக்கு மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கும் நம் KMT மருத்துவமனை நம் ஊர் மக்கள் நலன் கருதி பிற சிகிச்சைகளுக்கும் நல்ல மருத்துவர்களை அமர்த்தி தரமான சேவையை அளிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும். டாக்டர் M.S.அஷ்ரப் அவர்களின் தலைமையில் அமைந்த K.M.T . மருத்துவமனையின் புதிய நிர்வாகம் திறம்பட செயல்படுவதற்கு நல்வாழ்துக்கள்.
குறிப்பாக மருத்துவமனையில் நிரந்தரமாக பணிபுரியக்கூடிய மகப்பேறு மருத்துவர் , MD மருத்துவர் ஒருவரையும் நியமித்தால் நமதூர் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். புதிய நிர்வாகம் இதனை மேற்கொள்ளும் என முழுமனதுடன் எதிர்பார்க்கிறோம்.
புதிய நிர்வாகம் வெளிப்படையாக செயல்படும் என்றும் , மருந்தகத்தில் நல்ல தேர்ச்சிபெற்ற ( B.Pharm) மருந்தாலுனரை
பணியில் நியமிக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும். கே.எம்.டி. மருத்துவமனை புதிய நிர்வாகம் திறம்பட செயல்பட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என பிரார்திக்கிறேன். நமதூரிலேயே இயற்க்கை சூழலுடன் அமைந்துள்ளது நமது மருத்துவமனை. காயல்நகர மக்கள் தனது மருத்துவசேவை அனைத்திற்கும் நமது மருத்துவமனையை பயன்படுத்த வேண்டும். பொதுமக்களால் கூறப்படும் புகார்களை நிவர்த்தி செய்ய நிர்வாகம் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக செவிலியர்கள் நோயாளிகளிடத்தில் மென்மையாகவும், கனிவாகவும் நடந்துக்கொள்ள அறிவுறுத்தவும் என அன்புடன் வேண்டுகிறேன்.
14. Re:கே.எம்.டி. மருத்துவமனைக்க... posted bymackie noohuthambi (colombo)[24 February 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17153
CONGRATULATIONS! IT WAS A LONG DUE CHANGE. CITIZENS OF KAYALPATNAM HAD A NOTION THAT DOCTORS OF KAYALPATNAM ARE NOT INTERESTED IN THE GROWTH OF KMT. ONE WAY IT WAS TRUE. LOT OF KAYALPATNAM DOCTORS DID NOT SUPPORT KMT DUE TO THE FACT THAT THE ADMINISTRATION IS NOT IN FAVOUR OF DOCTORS WORKING IN KMT HAVE AN INDIVIDUAL CLINIC OF THEIR OWN. NOW THE DILEMMA IS OVER. DR ASHRAF HIMSELF IS IN THE DRIVER'S SEAT. CHANGE IS THE ONLY THING THAT DOES NOT CHANGE IN THE WORLD. ALL OTHER THINGS ARE SUBJECT TO CHANGE.
மாற்றம் ஒன்றே மாறாதது. வாழ்த்துக்கள். புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்கவண்ண பூமழை பொழிகிறது என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. புதிய அணியின் தலைமையில் நமது KMT மிகச்சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக வளர்ச்சி பெரும் என்பதில் ஐயமில்லை.
இது வரை அதனை நிர்வாகம் செய்தவர்கள் சாதரணமானவர்கள் இல்லை.இதன் வளர்ச்சிக்கு அவர்கள் கொடுத்தவிலை சாதாரணமானது இல்லை. ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கு முன் அதை உருவாக்குவது மிக கஷ்டமானது என்பதை நாம் அறிவோம். எனவே 1990 முதல் இன்று வரை அதற்காக உழைத்தவர்கள், மறைந்தவர்கள் எல்லோரையும் நினைத்துப்பார்த்து அவர்களுக்காக து ஆ செய்கிறோம்.
இப்போதைய நிர்வாகம் அவர்களிடம் அடிக்கடி ஆலோசனை கலந்து கொள்ளுங்கள். அடிக்கடி மக்களை சந்திக்க, மக்கள் உணர்வுகளை அறிந்து கொள்ள, குறைகளை சரிசெய்து கொள்ள எல்லா விதமான வியூகங்களையும் வகுத்து செயல்படுங்கள்.
பொருப்பேற்றிருப்பவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. அல்லாஹ்வின் உதவி இவர்களுக்கு எப்போதும் இருக்கும். உடனடியாக ஒரு ஊர் கூட்டம் கூட்டி எல்லா மக்களையும் KMT வரச்செய்து மக்களின் நல்வாழ்த்தை பெறுங்கள். பிறந்திருக்கும் ரபீஉல் அவ்வல் பிறை உங்களுக்கு நல வாழ்துக்கூரட்டும். MARHABAN AHLAN VASAHLAA. வாழ்த்துக்களுடன் மக்கி NOOHUTHAMBI
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross