2013 ஆம் ஆண்டு முதல் IIT, NIT போன்ற மத்திய பொறியியல் கல்லூரிகளுக்கு பொது நுழைவு தேர்வு அமலுக்கு
வருகிறது. அதன்படி தற்போது தனியாக நடைபெறும் Indian Institute of Technology (IIT) இல் பயில IIT JEE தேர்வும், பிற மத்திய பொறியியல் கல்லூரிகளில் பயில All India Engineering Entrance Examination (AIEEE) தேர்வும் - ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
இந்தியாவில் தற்போது 16 IIT களும், சுமார் 30 NIT களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இக்கல்லூரிகளில் பயில ௦- இருவேறு நுழைவு தேர்வுகளை எழுதுகின்றனர்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள நுழைவு தேர்வு இரு பாகங்களாக இருக்கும். அவை பொது அறிவையும், பாட அறிவையும் பரிசோதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
நுழைவு தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு 60 சதவீத முக்கியத்துவமும், 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு 40 சதவீத முக்கியத்துவமும் வழங்கப்பட்டு - கல்லூரிகளுக்கான அனுமதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
இது மத்திய அரசு பொறியியல் கல்லூரிகளுக்கான பொது தேர்வு என்றாலும் - மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும், தனியார் கல்லூரிகளையும் - இந்நுழைவு தேர்வை - தங்கள் மாநிலத்தில் உள்ள பொறியியல்கல்லூரிகளிலும் அனுமதி பெற பயன்படுத்த வேண்டியுள்ளது.
ஹரியானா, உத்தர்கந்த், டெல்லி, சண்டிகர் போன்ற மாநிலங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும் - தமிழ் நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் இதற்கு இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை. |