சிறுபான்மை மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் Pre-Matric ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் இவ்வாண்டு (2011-12) விண்ணப்பம் செய்தவர்களில் - ஊக்கத்தொகை பெற்றவர்கள் விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் ஊக்கத்தொகை பெற்றவர்கள் விபரங்கள் வருமாறு:-
(1) புதிதாக விண்ணப்பம் செய்து ஊக்கத்தொகை பெற்றவர்கள் - 1
(2) புதிதாக விண்ணப்பம் செய்து ஊக்கத்தொகை பெற்றவர்கள் - 2
(3) முன்னரே ஊக்கத்தொகை பெற்றுவருபவர்கள் விபரம் (புதுப்பித்தல்)
பாரத பிரதமரின் சிறுபான்மை சமுதாயத்திற்கான 15 அம்ச திட்டம் ஜூன் 2006 இல் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு அம்சமே Pre - Matric உதவி தொகை திட்டம். முஸ்லிம், கிருஸ்துவர், பௌத்தர், சீக்கியர் மற்றும் பார்சி ஆகிய தேசிய அளவில் சிறுபான்மை சமுதாய மாணவ, மாணவியருக்கு இவ்வுதவி தொகைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் 2008 - 2009 கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விகிதாசாரங்கள் அடிப்படையில் இவ்வுதவி தொகைகள் - ஒவ்வொரு மாநிலத்திலும் - வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தினை அமல்படுத்த ஆகும் செலவுகளில் 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீத மாநில அரசும் பங்கேற்கின்றன.
Pre - Matric உதவி தொகை திட்டத்தின் கீழ் 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிப்புக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மொத்த உதவி தொகைகளில் 30 சதவீதம் மாணவியருக்கு ஒதுக்கப்படுகின்றது. இவ்வுதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். ஒரு குடும்பத்தில் கூடுதலாக இரு மாணவர்கள் மற்றுமே இத்திட்டதின்க்கீழ் பயனடைய முடியும். முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பித்தவர்களில் வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். |