வி-யுனைட்டெட் ஸ்போர்ட்டிங் க்ளப் சார்பில், இவ்வாண்டும் மே, ஜூன் மாதங்களில், வழமை போல விளையாட்டுப் போட்டிகள் நகரளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதெனவும், க்ரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான உரிமையாளர்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வி-யுனைட்டெட் நிறுவனர் ஹாங்காங் அலீ ஃபைஸல் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நமது காயல்பட்டினம் விளையாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்தவும், திறமை வாய்ந்த வீரர்களை வெளியுலகுக்கு எடுத்துச் செல்லவும், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு, இன்ஷாஅல்லாஹ் 4-வது ஆண்டாக இந்த வருடமும் இறைவனின் உதவியால் வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் சீசன் - 4 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
அதனடிப்படையில், கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளை வருகின்ற மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டியில் பங்குபெற உள்ள 8 அணிகளுக்கான உரிமையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். உரிமை கோர விரும்புவோர் info@vunited.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுமாறு, எமது வி-யுனைட்டெட் ஸ்போர்ட்டிங் க்ளப் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, வி-யுனைட்டெட் நிறுவனர் ஹாங்காங் அலீ ஃபைஸல் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |