காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ஹாஜி கே.வி.செய்யித் அஹ்மத், இன்று அதிகாலை 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 88.
காயல்பட்டினம் தைக்காத் தெருவைச் சார்ந்த இவர், மர்ஹூம் செ.இ.ஹபீப் முஹம்மத் என்பவரின் மகனும், மர்ஹூம் கலீபா செய்யித் முஹம்மத் என்பவரின் மருமகனும், மர்ஹூம் கே.வி.மொகுதூம் முஹம்மத், கே.வி.செய்யித் முஹ்யித்தீன், கே.வி.ஷாஹுல் ஹமீத், மர்ஹூம் கே.வி.ஸதக்கத்துல்லாஹ், மர்ஹூம் கே.வி.அஹ்மத் தாஹிர் ஆகியோரின் சகோதரரும், கே.வி.ஹபீப் முஹம்மத் என்பவரின் தந்தையும், எஸ்.எம்.ஏ.மஹ்மூத் நெய்னா என்பவரின் மாமனாரும், கலீபா அப்துல் ஹமீத், கலீபா ஜெய்லானீ ஆகியோரின் மச்சானும், முஹம்மத் அப்துல் காதிர், செய்யித் அஹ்மத் ஆதில், செய்யித் அஹ்மத், ஹாஜி ஜே.எம்.அப்துர்ரஹீம் காதிரீ ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 05.00 மணியளவில், அவரது இல்லத்திலிருந்து, மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளிவாசலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு, ஹாஜி எம்.இசட்.ஜலீல் முஹ்யித்தீன் காதிரீ ஜனாஸா தொழுகையை வழிநடத்தினார். பின்னர், புதுப்பள்ளி மையவாடியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நிகழ்வுகளில், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை மற்றும் நிர்வாகிகளும், புதுப்பள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் மற்றும் நிர்வாகிகளும், நகரப் பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|