மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 07.02.2012 முதல் 06.03.2012 தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில்,
07.02.2012 தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
10.02.2012 ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
13.02.2012 திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
15.02.2012 கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
17.02.2012 திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
ஆகிய இடங்களில் இதுவரை முகாம் நடத்தப்பட்டுள்ளது.
20.02.2012 உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
22.02.2012 சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
24.02.2012 ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
27.02.2012 விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
29.02.2012 புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
02.03.2012 கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
06.03.2012 கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
ஆகிய இடங்களில் இனி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முகாம்கள், சங்கரன்கோயில் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதி மாநில தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி மேற்படி மருத்துவ முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |