சென்னையில் வசிக்கின்ற - சென்னைக்கு வருகின்ற காயல்பட்டினம் நகர மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தகுந்த
வழிகாட்டுதலை அளித்திடும் பொருட்டு காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) செயல்பட்டு வருகிறது. அண்மையில் துவக்கபப்ட்ட
இவ்வமைப்பு - வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் என மூன்று துறைகளுக்கும் - தனியே குழுக்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது.
KCGC அமைப்பில் இதுவரை இணைந்துள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஒன்றுக்கூடல் மற்றும் மருத்துவ முகாம் நிகழ்ச்சி
இன்று (பிப்ரவரி 19) காலை சென்னை கேளம்பாக்கம் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் நடைபெற்றது. சென்னையிலிருந்து உறுப்பினர்கள் மற்றும்
அவர்கள் குடும்பத்தினரை அழைத்துச்செல்ல இரு சிறப்பு பேரூந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் 130 உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.
துவக்கமாக உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலைவாய்ப்பு குழு உறுப்பினர் எம்.என். அப்துல் காதர் முத்துவாப்பா வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஷமீமுல் இஸ்லாம் - KCGC பற்றிய அறிமுகவுரை நிகழ்த்தினார்.
வேலைவாய்ப்பு குழு உறுப்பினர் இப்னு சௌத் - வெளியூர்களில் வாழும், பிற ஊர் மக்கள் எவ்வாறு கூட்டாக செயல்படுகிறார்கள் என்பதனை
விளக்கினார்.
தொடர்ந்து ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஹெச்.என். சதக்கத்துல்லாஹ் - KCGC அடுத்த மூன்று மாதங்களில் செய்யவேண்டிய பணிகள் குறித்து
பேசினார்.
பெண்களுக்கான மருத்துவ முகாம் முதலில் நடந்தது. இம்முகாமுக்கான சிறப்பு ஏற்பாடுகளை சென்னை-வாழ் காயல் மருத்துவர்கள் டாக்டர் கானி
சேக், டாக்டர் அஹ்மத் நெய்னா, டாக்டர் நவாஸ், டாக்டர் இஸ்மாயில் மற்றும் அவர்களின் குழுவினர்கள் செய்திருந்தனர்.
முகாமில் கலந்துக்கொண்டவர்களுக்கு - சர்க்கரை , எழும்பு அடர்த்தி, ரத்த அழுத்தம், BMI ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,
மருத்துவர்களின் ஆலோசனையும் வழங்கப்பட்டது.
பெண்களுக்கான பரிசோதனைகளை தொடர்ந்து - ஆண்களுக்கான பரிசோதனைகள் நடந்தன.
கேளிக்கைக்காக - குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவர்கள் - Musical Chair மற்றும் வினாடி வினா
போட்டிகளில் கலந்துக்கொண்டனர்.
ஆண்களுக்கான Musical Chair போட்டியில் பரிசு வென்றவர்கள்
1. நூஹு நபிஸ் (த/பெ ஆடிட்டர் ரிபாய்)
2. கபீர் (த/பெ கலீல்)
3. இப்ராகிம் (த/பெ ஜக்கரியா)
பெண்களுக்கான Musical Chair போட்டியில் பரிசு வென்றவர்கள்
1. நுமைரா (த/பெ புஹாரி)
2. மஹ்மூதா (த/பெ சுலைமான்)
3. நமீரா (த/பெ புஹாரி)
வினாடி வினா போட்டியில் வென்றவர்கள்
முதல் பரிசு
1. அஸ்மியா
2. ரபியாஹ்
3. ஹுமைராஹ்
4. சுமையாஹ்
இரண்டாம் பரிசு
ஷேய்க் அல்தாப்
மூன்றாம் பரிசு
பஹம்மா
நூஹு நபீஸ்
ஆறுதல் பரிசுகள்
1. அமீனா பாயிஸா
2. ஆசியா கதீஜா
3. இப்ராகிம் குளம்
4. சுயைடியா
5. பதாஹா
6. முஹம்மது பாத்திமா
சிறப்பு பரிசு
ஹாலித்
முகாமில் கலந்துக்கொண்டவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இறுதியாக போட்டிகளில் வென்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்துக்கொண்ட அனைத்து சிறுவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
தகவல்:
முஹம்மது முக்தார்
[செய்தி திருத்தப்பட்டது @7:30 am/20.02.2012] |