பிப்ரவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
காயல்பட்டினத்தில்,
இளைஞர் ஐக்கிய முன்னணி,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு,
தீவுத்தெரு - ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,
கற்புடையார் பள்ளி வட்டம்,
கடையக்குடி,
கோமான் தெரு பெண்கள் தைக்கா,
ஓடக்கரை,
எல்.கே.மேனிலைப்பள்ளி,
ரெட் ஸ்டார் சங்கம்,
அரசு மருத்துவமனை,
கீழலெட்சுமிபுரம் துணை சுகாதார நிலையம்,
ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி,
உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு
ஆகிய 14 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு மறுநாள் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காயல்பட்டினத்தில் மொத்தத்தில், 5 வயதிற்குட்பட்ட 3415 குழந்தைகளுக்கு இம்முறை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து அளித்த காட்சி:-
எல்.கே.மேனிலைப்பள்ளியில், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் சொட்டு மருந்து அளித்த காட்சி:-
அந்தந்த மையங்களில், நகர்மன்ற உறுப்பினர்கள், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளித்த காட்சி:-
நகர்மன்ற உறுப்பினர் முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வளாகத்திலும், எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், இளைஞர் ஐக்கிய முன்னணி வளாகத்திலும், அ.ஹைரிய்யா, அப்பா பள்ளி சதுக்கை (ரெட் ஸ்டார் சங்க முகாம்) வளாகத்திலும், ரெங்கநாதன் என்ற சுகு, ஓடக்கரை சத்துணவு மைய வளாகத்திலும், பாக்கியஷீலா கீழ லெட்சுமிபுரம் துணை சுகாதார நிலைய வளாகத்திலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளித்தனர். |