காயல்பட்டினம் தஃவா சென்டரில் தர்பிய்யா வகுப்பு பிப்ரவரி 19 (ஞாயிறு) அன்று நடைபெற்றது. இது குறித்து தஃவா சென்டர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தஃவா பயிற்சி பட்டறையின் 5-வகுப்பு 19-02-2012 காலை முதல் மாலை வரை குறித்த நேரத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்து ஒவ்வொரு முறையும் பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், வேலை செய்பவர்கள், மற்றும் உயர் பதவி வகிப்பவர்கள் என்பதை நாம் முன்பு வெளியிட்டிருந்த செய்தியின் மூலம் அறிவோம். வழக்கம் போல வகுப்பில் முதலாவதாக சென்ற வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் பற்றிய தேர்வு நடத்தப்பட்டது.
பின்னர் ‘இஸ்லாம் அறியா இஸ்லாமியர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது!' என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது ரபீக் பாஸிம் பிர்தௌசி அவர்கள் (பேராசிரியர் - அல் ஜாமியத்துல் பிர்தௌசிய்யா) முஸ்லிம்களிடையே உள்ள ஷிர்க் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களை மையமாக வைத்து பாடம் நடத்தினார். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தக்க விளக்கங்களையும் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
மதியம் சகோதரர் மீரான் தாவூதி அவர்களின் 'இறந்து போன இதயம் இயங்கிட' என்ற தலைப்பில் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் ஒவ்வாரு நாளும் சிறிது சிறிதாக இறந்து கொண்டிருக்கும் நமது இதயத்தை எவ்வாறு இயக்கி இறைவனை அடைவது என்று அழகிய முறையில் எடுத்துரைத்தார்கள்.
பின் சகோதரர் பிலால் அவர்கள் நபிவழி பிரார்த்தனை என்ற அன்றாடம் நாம் ஓத வேண்டிய துஆக்களை மனனம் செய்ய பணித்தார்கள். இதில் சென்ற முதல் வகுப்பில் மனனம் செய்ய தந்த துஆக்களை அனைவரும் சிறந்த முறையில் மனனம் செய்திருந்தது குறிப்பிடதக்கது அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷாஅல்லாஹ் தொடர் தர்பிய்யாவின் 6-ஆம் வகுப்பு(தஃவா பயிற்சி) வருகிற மார்ச் மாதம் 18 -ஆம் தேதி நமது தஃவா சென்டரில் வைத்து நடைபெறவுதள்ளது என்பதனையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்து மதம் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலான பயிற்சி நடைபெறவுள்ளது.
இப்படிக்கு,
இறைப்பணியில் சகோதர/சகோதரிகள்.
தஃவா சென்டர், காயல்பட்டணம்
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |