தமிழக அரசு - மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திற்கும், அதன் தகுதி - மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் - ஒவ்வொரு
மாதமும் மானியம் வழங்கிவருகிறது. இம்மானியமே - உள்ளாட்சி மன்றங்களின் வருவாயில் பெரும் பங்கினை வகிக்கிறது.
நடப்பாண்டில் (2011 - 2012) - ஜனவரி 2012 முடிய - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 1 கோடியே , 96 லட்சத்து , 19
ஆயிரத்து 46 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு
செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 35 லட்சத்து , 77
ஆயிரத்து 340 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 1 கோடியே , 60 லட்சத்து , 41 ஆயிரத்து 706 ரூபாய் - நகராட்சிக்கு
வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2012
அரசு உதவி தொகை (A) - 19,71,519
பிடித்தங்கள்:
(a) DLFA Pension - 1,65,077
Repayment of Water Supply Loan to HUDCO - Recovery of dues
(b) Principal - 1,53,000
(c) Interest - 1,47,000
பிடித்தம் (Deductions) (a+b+c = B) - 4,65,077
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 15,06,442
ஏப்ரல் 2011 - ஜனவரி 2012
அரசு உதவி தொகை (A) - 1,96,19,046
பிடித்தம் (Deductions) (B) - 35,77,340
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 1,60,41,706
தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை. |